Saturday, July 27, 2024
Home > செய்திகள் > குடியரசு தின அணிவகுப்பில் தமிழக வாகனத்திற்கு மறுப்பா..!?

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக வாகனத்திற்கு மறுப்பா..!?

17.1.22/12.50pm

டெல்லி : தமிழக அரசின் அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக செய்திகள் கூறுகின்றன.

ஒவ்வொரு வருட குடியரசுதின கொண்டாட்டத்தின் போதும் அனைத்து மாநிலங்களில் இருந்தும் அலங்கார வாகன அணிவகுப்புகள் செல்வது வழக்கம். அந்த வாகனங்களில் அந்தந்த பிராந்திய வரலாற்று சிறப்புமிக்க தலைவர்களின் படம் இடம்பெறுவது மரபு.

`

இந்நிலையில் இந்த வருட குடியரசு தின கொண்டாட்டத்திற்க்கு தமிழகத்தில் இருந்து வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார் உள்ளிட்டோரின் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தியை தமிழக அரசு அனுப்பி வைத்தது. அந்த வாகனத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளதுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மிகவும் பிரபலமான சர்வேதச அளவில் பரிச்சயமான தலைவர்களை எதிர்பார்ப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேலுநாச்சியார் போன்றவர்களை சர்வதேச தலைவர்களுக்கு யாரென்றே தெரியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தமிழக அரசின் அலங்கார ஊர்தி 4 ஆவது சுற்று வரை சென்ற நிலையில் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மொத்தம் 36 மாநிலங்கள் அனுப்பிய அலங்கார ஊர்திகளில் 12 மாநிலங்களின் மாடல்களை மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

```
```

தென்னிந்தியாவில் தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடகா அரசின் அலங்கார ஊர்திக்கு மட்டும் மத்திய அனுமதி அளித்துள்ளது சர்ச்சையை உண்டுபண்ணியுள்ளது.

…..உங்கள் பீமா