Friday, March 29, 2024
Home > செய்திகள் > அள்ளிவீசப்படும் இலவசம்..! களத்தில் இறங்கிய பாஜக..! கைகோர்த்த உச்சநீதிமன்றம்..!

அள்ளிவீசப்படும் இலவசம்..! களத்தில் இறங்கிய பாஜக..! கைகோர்த்த உச்சநீதிமன்றம்..!

25-1-22/14.45pm

டெல்லி : தேர்தலில் வெற்றிபெற மாநிலகட்சிகள் மக்களுக்கு இலவசங்களை அறிவிக்கின்றன. ஆட்சிக்கு வந்தபின்னர் சில இலவசங்கள் வழங்கப்படுகிறது. சிலநேரங்களில் கிடப்பில் போடப்படுகிறது. தமிழகத்தை போல ஒவ்வொரு மாநிலங்களும் தேர்தலின் போது இலவசம் என்கிற வாக்குறுதியை வாரி வழங்குகிறது.

தென்னகத்தில் திராவிட கட்சிகள் போல வடக்கே பல கட்சிகள் குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் தோன்றியதையெல்லாம் இலவசமாக அறிவிக்கிறார்கள். அதற்கான நிதி மத்திய அரசிடமிருந்தே பெறப்படுகிறது. இதனால் மக்களுக்கு கிடைக்கவேண்டிய நலத்திட்டங்கள் நிதிப்பற்றாக்குறையால் தொடரமுடியாமல் கோப்பாகவே அலுவலகத்தில் முடங்கிக்கிடக்கின்றன.

இந்நிலையில் பிஜேபி தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ” அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்காக இலவசங்களை அறிவிக்கின்றன. இது முற்றிலும் உள்நோக்கமுடையதாகும். இதற்கான நிதி மத்திய அரசின் தலையில் விழுகிறது. வாக்கு வங்கிக்காக கூறப்படும் இலவசம் மக்களை மூளைச்சலவை செய்யவே பயன்படுகிறது. மக்களின் வரிப்பணம் தவறான வழியில் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்க கூடாது.

`

இலவசத்தை அறிவிப்பதால் ஜனநாயக நாட்டில் தேர்தல் நேர்மையாக நடைபெறுமா என்கிற சந்தேகம் எழுகிறது. இலவசங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதை தடை செய்யவேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மனுவின் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. அந்த மனுவை தலைமை நீதிபதி CJI ரமணா ஜஸ்டிஸ் ஏ.போபண்ணா மற்றும் ஜஸ்டிஸ் ஹிமா கோலி ஆகியோர் கொண்ட பென்ச் விசாரித்தது.

அஸ்வினி உபாத்யாய் தரப்பில் விகாஸ் சிங் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் ஆணையம் நெறிமுறைகள் குறித்து நான்கு கூட்டங்கள் நடத்த வேண்டும். ஆனால் இதுவரை ஒரு கூட்டத்தை மட்டுமே நடத்தியிருக்கிறது.

```
```

இலவச அறிவிப்பு மக்களை திசைதிருப்ப செய்யும் செயல். மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் இன்னும் நான்கு வார காலங்களுக்குள் பதிலளிக்கவேண்டும்” என குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

….உங்கள் பீமா