Thursday, June 20, 2024
Home > செய்திகள் > அமைச்சருக்கு ஏன் அவசரம்..? கேள்வியெழுப்பும் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை..!

அமைச்சருக்கு ஏன் அவசரம்..? கேள்வியெழுப்பும் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை..!

25-1-22/16.30pm

சென்னை : கட்டாய மதமாற்றத்தால் உயிரிழந்த அரியலூர் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில் அறவழியில் வள்ளுவர்கோட்டத்தில் பிஜேபியினர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டாய மதமாற்றத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவிக்கு நீதிகிடைக்க இந்தியா முழுவதுமுள்ள நெட்டிசன்கள் குரல்கொடுத்து வருகின்றனர். மேலும் பல தேசிய ஊடகங்கள் தேசம் முழுவதும் இந்த செய்தியை கொண்டுசேர்த்துள்ளன. இந்நிலையில் மதுரை நீதிமன்ற உத்தரவின் பேரில் இறந்த மாணவியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்த முத்துவேல் என்பவர் இன்று வல்லம் டி.எஸ்.பி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தனது செல்போனை ஒப்படைத்தார்.

இந்த முத்துவேல் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே வள்ளுவர்கோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை “மரணமடைந்த மாணவிக்கு நீதிகிடைக்க வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். காவல்துறையினர் அவசரமாக அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என கூறுகின்றனர்.

`

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் சம்பவமே நடைபெறவில்லை என மறுக்கிறார். மதுரை நீதிமன்றம் வீடியோ வாக்குமூலத்தை ஆய்வுசெய்யவேண்டும் என கூறியிருக்கும் நிலையில் அமைச்சர் அவசரமாக மறுப்பது ஏன். வழக்கு சிபிஜ வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் ” என தெரிவித்தார்.

```
```

மேலும் இந்த மாணவியின் மரணம் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

….உங்கள் பீமா