14-12-21/17.05pm
மதுரை : திமுக கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் பல வாக்குறுதிகளை அள்ளி வீசியது. ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் மக்களுக்கு பட்டை நாமம் சாத்திவிட்டு மொட்டை மட்டும் இலவசம் என கூறியிருக்கிறது என பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் “பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும். அவர்களுக்கு மாதாமாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்த திமுக தலைவர் ஸ்டாலின் மகளிருக்கென தனியாக ஒரு மதுக்கடையை திறந்து புரட்சி செய்து வரலாற்றில் இடம்பிடித்துவிட்டார். இந்தியாவின் முதன்மை முதல்வருக்கான தகுதி அவருக்கே இருக்கிறது” என மதுரை பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று குடிபோதையில் ஈரோட்டில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசுப்பேருந்தில் பயணம் செய்த ஒரு பெண் சக ஆண் பயணிகளை அருவருக்கத்தக்க ஆபாசமான வார்த்தையில் ஒருமையில் பேசிக்கொண்டே பயணித்தார். மேலும் பேருந்து ஓடிக்கொண்டிருக்கும்போது எழுந்து நின்று ஆபாச வார்த்தைகளை காதுகொடுத்து கேட்க முடியாத அளவிற்கு அள்ளி வீசினார்.
மேலும் ஒரு நிறுத்தத்தில் பேருந்து நிற்கும்போது இறங்க முயன்ற ஒரு முதியவரை முதுகில் அறைந்தார். அரசுப்பேருந்து ஓட்டுனரோ அல்லது நடத்துனரோ கண்டிக்க முன்வரவில்லை. ஆனால் பயணிகளில் ஒருவர் போலீசுக்கு தகவல் தெரிவிக்க, அந்த பெண் இறங்கியதும் போலீஸ் கொத்தாக தூக்கியது. இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
…..உங்கள் பீமா