Thursday, March 28, 2024
Home > செய்திகள் > பரவிய வதந்தி…! வகையாக சிக்கிக் கொண்ட NDTV…!

பரவிய வதந்தி…! வகையாக சிக்கிக் கொண்ட NDTV…!

6-11-21/ 10.13AM

சமீபகாலமாக ஊடகங்கள் வதந்திகளை பரப்புவதும் செய்திகளை திரித்து கூறுவதும் தொடர்கதையாகியுள்ளதாக நடுநிலையாளர்கள் விமர்சித்து வருகின்றனர். தேசிய ஊடகமான NDTV அதன் பொறுப்பை மறந்து செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

இந்நிலையில் போதைபொருள் வழக்கில் சிக்கி சிறைசென்ற பிரபல நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யான் கான் பற்றிய செய்திகளை முந்திக்கொண்டு வழங்கியது இந்த NDTV. மேலும் ஆர்யான் கானை சிறுவன் எனவும் மத்திய அரசு ஷாருக்கானை பழிவாங்க நினைப்பது போன்ற தோற்றத்தையும் கட்டமைத்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதில் ஆர்யான் கானை கைது செய்த சமீர் வான்கடே அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் மேலும் ஐந்து வழக்கிலிருந்தும் விடுவிக்கப்பட்டதாக பொய்யான செய்தி வெளியிட்டுள்ளது.

`

இதற்கு பதிலடி கொடுத்த சமீர் வான்கடே மனைவியான க்ரந்தி அப்படி ஒரு பணிமாற்றம் நடைபெறவில்லை என ஆதாரத்தை வெளியிட்டார். மேலும் NCB நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ” மும்பை மண்டல அதிகாரிகள் யாரும் இதுவரை பணியிடமாற்றம் செய்யப்படவில்லை. அவரவர் ஈடுபட்டுள்ள வழக்கில் மேலும் தொடர்கிறார்கள்” என தெரிவித்துள்ளது.

```
```

NDTV உட்பட பிரபலமான செய்தி நிறுவனங்கள் செய்தியை திரித்துக் கூறி மக்களிடையே வதந்தியை பரப்புவதாக நடுநிலையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

…….உங்கள் பீமா