30-1-22/12.00PM
மேற்குவங்கம் : ஜம்மு காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடத்தை முதல்பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது பிரபல அரசியல் பத்திரிக்கை. இதையடுத்து கொல்கொத்தா மற்றும் பிறபகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

மேற்குவங்கத்தில் மமதா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்டை நாடுகளில் இருந்து ஊடுருவல்காரர்கள் அதிகம் நுழையும் பகுதியாக மேற்குவங்கம் திகழ்கிறது. இதற்க்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் மமதா தொகுதியை சேர்ந்த வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்த பங்களாதேஷை சேர்ந்த இளைஞர் ஒருவர் வந்து அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டது சர்ச்சையை கிளப்பியிருந்தது.

சமீபத்தில் மமதா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பங்களாதேஸ் மியான்மர் பாகிஸ்தான் என எங்கிருந்து வந்தாலும் அவர்கள் மேற்குவங்க மக்களே என அதிரடியாக பேசியிருந்தார். இந்நிலையில் நேற்று திரிணாமூல் காங்கிரசின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான ஜாகோ பங்களா தலையங்கத்தில் இந்திய வரைபடத்திலிருந்து ஜம்மு காஷ்மீரை நீக்கி படத்தை வெளியிட்டுள்ளது. இது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இதுகுறித்து கருத்து கூறிய பாஜக தேசிய துணைத்தலைவர் திலிப் கோஷ் திரிணாமுல் காங்கிரசை தேசவிரோத கட்சி என விமர்சித்தார். மேலும் நாட்டின் அடிப்படைக்கொள்கைகளை கூட பின்பற்ற முடியாத கட்சி நாட்டுக்கு தேவையில்லை என குறிப்பிட்டார். மற்றொரு பாஜக தலைவர் சாமிக் பட்டாச்சார்யா “ஜம்மு காஷ்மீரை பற்றி மம்தாவின் பத்திரிக்கை கவலைப்பட தேவையில்லை. அந்த பத்திரிகையை இழுத்து மூடும் நேரம் நெருங்கிவிட்டது” என காட்டமாக விமர்சித்துள்ளார்.
…..உங்கள் பீமா