Friday, March 29, 2024
Home > செய்திகள் > முன்னாள் முதலமைச்சருக்கு ஐந்தாவது வழக்கில் ஐந்தாண்டுகள் சிறை..!

முன்னாள் முதலமைச்சருக்கு ஐந்தாவது வழக்கில் ஐந்தாண்டுகள் சிறை..!

21-2-22/17.00pm

பீகார் : முன்னாள் முதலமைச்சரான லல்லு பிரசாத் யாதவுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை மற்றும் அறுபது லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

1995-96ல் டொரோண்டா கருவூலத்திலிருந்து முறைகேடாக 139.55 கோடியை மோசடி செய்தது, தும்கா, தியோகர் மற்றும் சாயிபாசா கருவூல முறைகேடு உள்ளிட்டவற்றையும் சேர்த்து லல்லு மீது சிபிஐயால் 64 வழக்குகள் பதியப்பட்டன. இந்த வழக்கில் லாலுவுடன் சேர்த்து 170 பேர் குற்றம்சாட்டப்பட்டனர். அதில் 55பேர் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏழு பேர் அப்ரூவராக மாறினர். ஆறுபேர் தலைமறைவாக உள்ளனர்.

`

இந்த வழக்குகளில் ஐந்தாவது வழக்கின் தீர்ப்பு மதியம் வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் லல்லுவுக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனையும் அறுபது லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ” அவர் மீது நாங்கள் எதுவும் வழக்கு பதியவில்லை. இப்போது அவருடன் இருப்பவர்களே வழக்கு பதிந்திருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

```
```

….உங்கள் பீமா