22-2-22/10.18am
UPDATED :10.45AM
சென்னை : தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பல களேபரங்களுடன் ஆளும்கட்சிக்கு சாதகமாக நடந்துமுடிந்திருக்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துவருகின்றன. கடந்த 19 பிப்ரவரி அன்று நடந்து முடிந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது.
தேசிய கட்சியான பிஜேபி தனது வெற்றிக்கணக்கை கோவையிலிருந்து தொடங்கியுள்ளது. கோவை தெற்கு மாவட்டம் செட்டிபாளையம் பேரூராட்சி 2 மற்றும் 3ஆவது வார்டுகளில் பிஜேபி வெற்றி பெற்றுள்ளது. கீழ்குந்தா பேரூராட்சி வார்டு எண் 6 ல் மொத்தமுள்ள 392 வாக்குகளில் 152 வாக்குகள் பெற்று பிஜேபி வெற்றிக்கனியை தட்டிப்பறித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி ராஜசிங்கமங்கலம் பேரூராட்சி வார்டு 3ல் திருமதி.அனுராதா பாண்டித்துரை வெற்றிபெற்றுள்ளார். திருச்செந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட காணம் பேரூராட்சி வார்டு 1ல் பூபதியம்மாள் வெற்றிபெற்றுள்ளார்.

கோயம்புத்தூர் செட்டிபாளையம் வார்டு 3ல் திருமதி.ஆ.மயிலாத்தாள் வெற்றிபெற்றுள்ளார். பணகுடி 4வது வார்டில் மனுவேல் ஸ்ரீவைகுண்டம் 3ஆவது வார்டில் சங்கரி ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

ராமநாதபுரம் கமுதி வார்டு 14ல் சத்யா போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.கன்னியாகுமரி பகோடு வார்டு 1ல் திருமதி.துளசி பாய் கன்னியாகுமரி இரணியல் வார்டு 12ல் வி.ஸ்ரீகலா கோயம்புத்தூர் செட்டிபாளையம் வார்டு 2ல் மதிவாணன், பழைய ஜெயன்கொண்ட சோழபுரம் பேரூராட்சி 3வது வார்டில் கோபிநாத், ஆரல்வாய்மொழி வார்டு 2ல் மாதவன்பிள்ளை போட்டியின்றியும் வெற்றிபெற்றுள்ளனர்.

இதுவரை 14 இடங்களில் பிஜேபி தனது முத்திரையை பதித்து திமுகவினரை கலங்கடித்துள்ளது.

…..உங்கள் பீமா

updated : நாகர்கோவில் திருமதி.மீனா தேவ் வடுகபட்டி 5வது வார்டு வசந்த் பாலாஜி, தென்திருப்பேரை 5வது வார்டு ரேவதி, தென்திருப்பேரை பேரூராட்சி 2வது வார்டு குமரேசன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

