14-11-21/11.10am
சிதம்பரம்: திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் 11 க்கும் மேற்பட்ட கோவில்கள் தகர்க்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சிதம்பரம் நகரில் அமைந்துள்ள இரண்டு பழமையான கோவில்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி தர்க்கப்படப்போவதாக திமுக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சிதம்பரம் நகர் கீழவீதியில் அமைந்துள்ள வீர சக்தி ஆஞ்சநேயர் கோவில் மற்றும் கோவில் தேர் அருகே அமைந்துள்ள தான்தோன்றி விநாயகர் கோவில். இந்த இரு கோவில்களும் சாலை ஓரத்தில் அமைந்துள்ளன. பலவருடமாக மக்களுக்கு காட்சிதந்து அருள்பாலிக்கும் விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களை வருகிற 17ம் தேதி இடிக்கப்போவதாக நெடுஞ்சாலைத்துறை இரண்டு கோவில் நிர்வாகிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம்.
மேலும் சிதம்பரம் நடராஜ பெருமானை சந்திக்க வரும் பக்தர்கள் இந்த இரண்டு கோவில்களை தரிசித்து அருள் பெறுவது வழக்கம். இந்நிலையில் இத கோவில் இடிப்பு விவகாரம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முதல்வர் முக ஸ்டாலி தஞ்சை டெல்டா மாவட்டங்களில் ஆய்வுமேற்கொண்டார். இதையறிந்த சிதம்பரம் மக்கள் நேற்று முதல்வரை சந்தித்தனர்.
சிதம்பரம் கோவில்கள் தர்க்கப்படப்போவது குறித்தும் அதை தடுக்க ஆணையிட வேண்டும் எனவும் முதல்வரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவை கடவுள் மறுப்பாளர் முக ஸ்டாலின் ஏற்றுக் கொள்வாரா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
இதனிடையே சிதம்பரம் தொகுதி எம்பியான தொல்.திருமாவளவன் தனது ஒவ்வொரு அறிக்கையிலும் பேட்டியிலும் பொதுக்கூட்டத்திலும் சனாதனத்தை வேரறுப்போம் என முழக்கமிட்டு வருகிறார். இதனால் இந்த கோவில்கள் தகர்ப்பு விவகாரத்தில் இவரது பின்னணி ஏதாவது இருக்குமா என சிதம்பரம் தொகுதி மக்கள் சந்தேக கேள்விகளை எழுப்புகின்றனர்.
இதுகுறித்து வீராசக்தி ஆஞ்சநேயர் கோவில் ஐயர் ராஜாவை தொடர்புகொள்ள முயன்றபோது அவர் தரப்பிலிருந்து சரியான பதில்கள் வரவில்லை. மேலும் அவர் தரப்பிலிருந்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் திமுக தனது கடவுள் மறுப்பு கொள்கையை நிலை நாட்டை இந்துக்களின் கோவில்களை இடிக்க ஆரம்பித்துவிட்டது என கருத்து தெரிவிக்கின்றனர்.
….உங்கள் பீமா