Friday, March 6, 2026
Home > அரசியல் > பரபரப்பு…! பிஜேபி தலைவர் மீது பாய்ந்த வழக்கு..?

பரபரப்பு…! பிஜேபி தலைவர் மீது பாய்ந்த வழக்கு..?

28-1-22/11.45am

சென்னை : அரியலூர் மாணவியின் தற்கொலையை மதரீதியான சாயம் பூசி பிஜேபி அரசியலாக்குகிறது என திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் குற்றம்சுமத்தி வருகின்றன.

இறந்த மாணவியின் பெயர் மற்றும் அடையாளங்களை வெளியிட்டதாக தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை மற்றும் பிஜேபி தலைவர்கள் மீது வழக்கு பதியவேண்டும் என ஆளும்கட்சி மும்முரம் காட்டிவருவதாக அரசியல்நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதே திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அரியலூர் அனிதா விஷயத்தில் பெயர் அங்க அடையாளங்கள் என அனைத்தையும் மாணவி இறந்த அன்றே வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமூகத்தில் பதட்டம் உண்டாகும் விதத்திலும் இருபிரிவினருக்கிடையே மோதல் உருவாகும் விதத்திலும் தமிழக பிஜேபி இளைஞரணி தலைவர் வினோஜ்.பி.செல்வம் அவர்கள் பேசிவருவதாக கூறி அவர்மீது நடவடிக்கை எடுக்க அரசு தீவிரம் காட்டி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் இன்று வினோஜ் மீது
இந்திய தண்டனை சட்டம் 153, 505 (1)(பி) 505(2) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இதுகுறித்து பேசிய பிஜேபியினர் ” கருத்து சுதந்திரம் பற்றி வகுப்பெடுத்த திமுக தற்போது கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கிறது. மாணவியின் இறப்பை முழுதாக மறைக்கப்பார்க்கிறது. மாணவியின் மரணத்தால் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினருக்கு நீதிகிடைக்கும் வரையில் பிஜேபி போராடிக்கொண்டே இருக்கும்” என கருத்து தெரிவிக்கின்றனர்.

……உங்கள் பீமா