Tuesday, April 21, 2026
Home > அரசியல் > அண்ணாமலையிடம் சிக்கப்போகிறதா அடங்கமறு அத்துமீறு க்ரூப்..?

அண்ணாமலையிடம் சிக்கப்போகிறதா அடங்கமறு அத்துமீறு க்ரூப்..?

25-4-22/11.27AM

சென்னை : விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அதிமுக திமுக மக்கள்நல கூட்டணி என கொள்கையில்லாமல் பல இடங்கள் அடைக்கலம் தேடி ஒருவழியாக தற்போது திமுகவில் அடைக்கலம் ஆகியிருக்கிறது. அரசியலில் இன்னொரு மதிமுக என விசிக அரசியல் விமர்சகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே திருமாவின் ஆதரவாளர் என கூறிக்கொள்ளும் சங்கத்தமிழன் என புனைபெயர் கொண்ட ஒருவர் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலைக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு ” நீங்க எங்க தலைவரை பற்றி தேவையில்லாம பேசிட்டு இருக்கீங்க” என மிரட்டும் தொனியில் பேசியதுடன் அம்பேத்கார் பற்றி விவாதிக்க கமலாலயம் வருவதாகவும் கூறியுள்ளார். இதற்க்கு பதிலளித்த அண்ணாமலை தாராளமாக நேரில் வரலாம் என கூறியுள்ளார்.

மேலும் “அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களுடைய இடதுகை வலதுகை அனைவரும் நம்முடைய அலுவலகத்துக்கு வந்து அவர்கள் விரும்பும் புத்தகங்களை 26 ம் தேதி மதியம் 12 மணிக்கு கொடுக்கலாம். நம் அலுவலகத்தில் தயாராக இருக்கக்கூடிய புத்தகங்களையும் வாங்கி செல்லலாம். அதன் பின்பு அண்ணன் தொல் திருமாவளவனிடம் நேரத்தையும், தேதியும் அவர்கள் கூட்டாக அமர்ந்து முடிவு செய்து சொல்லட்டும், தயாராக சொல்லும் இடத்திற்கு வருகின்றேன்.

அனைத்து விடுதலை சிறுத்தை கட்சியின் சகோதர சகோதரிகளை நமது பிஜேபி தலைமை அலுவலகத்திற்கு 26 ஆம் தேதி வரவேற்கின்றேன், உங்களிடம் புத்தகம் இருந்தால் கொடுப்பதற்கு. தலைப்பு: அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய சித்தாந்தத்தை முழுமையாக பின்பற்ற கூடிய தலைவர் பாரத பிரதமர் மோடி அவர்கள்” என பதிவிட்டுள்ளார்.

….உங்கள் பீமா