Friday, July 12, 2024
Home > அரசியல் > பிஜேபி எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம்..! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

பிஜேபி எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம்..! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

28-1-22/12.50PM

மஹாராஷ்டிரா : கடந்த ஆண்டு சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஓபிசியினருக்கான இடஒதுக்கீடு விவாதத்தின் போது சிவசேனா காங்கிரஸ் MVA கூட்டணி அரசுக்கெதிராக பேசியதாக கூறி 12 பிஜேபி எம்.எல்.ஏக்கள் ஓராண்டு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

பிஜேபி எம்.எல்.ஏக்களான சஞ்சய் குடெ, ஆஷிஷ் செலர், அபிமன்யு பவார், க்ரிஷ் மகாஜன், அதுல் பட்கல்க்கர், பராக் அலவாணி, ஹரிஷ் பிம்பாலே, யோகேஷ் சாகர்,ஜெயக்குமார் ராவத், நாராயண் குச்சே, ராம் சத்புதே மற்றும் பூந்தி பாங்டியா ஆகிய 12 பிஜேபி எம்.எல்.ஏக்கள் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 5 அன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த இடைநீக்கம் ஜனநாயக படுகொலை என்றும் அரசின் அடக்குமுறை என்றும் எதிர்க்கட்சிகள் குரல்கொடுத்து வந்த நிலையில் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் “இந்த இடைநீக்க முடிவு தன்னிச்சையானது. அரசியல் சாசனத்திற்கு எதிரானது மட்டுமல்லாமல் சட்டத்திற்கு எதிரான செயல்” என கூறியதோடு உறுப்பினர்களின் இடைநீக்கம் செல்லாது என தீர்ப்பளித்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் வழங்கியுள்ளார்.

`

இதையடுத்து மஹராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் மற்றும் பிஜேபி தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் “தொடக்கத்திலிருந்தே இது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும் ஜனநாயக விரோத போக்கு எனவும் கூறிவந்துள்ளோம்.உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்” என கூறியுள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட கிரிஷ் மகாஜன் கூறுகையில் “வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பின் மூலம் MVA கூட்டணியின் முகத்தில் அறைந்துள்ளது.

```
```

இடைநீக்கம் பழிவாங்கும் செயல். சபாநாயகர் தேர்தலின் போது எங்களை ஒதுக்கிவைக்க நினைத்தனர். நீதிமன்றம் ஒரு தவறை நீக்கியுள்ளது. நியாமான இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்” என தெரிவித்தார். இணையத்தில் 12 MLA என ட்ரெண்ட் ஆகிவருகிறது.

….உங்கள் பீமா