Friday, February 7, 2025
Home > அரசியல் > அனல் பறக்கும் அரசியல்..! சரிகிறதா பிஜேபி..!?

அனல் பறக்கும் அரசியல்..! சரிகிறதா பிஜேபி..!?

டேராடூன் : உத்தரபிரதேசத்தை தொடர்ந்து உத்தரகண்ட் அமைச்சரும் பதவி விலகுவது பிஜேபிக்கு பெரும் தலைவலியை உண்டுபண்ணியுள்ளது.

உத்தரகாண்ட் வனத்துறை சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் ஹரக்சிங் ராவத். நேற்று உத்திரகண்ட மாநில அமைச்சரவையிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதை தொடர்ந்து இன்று அவர் மீண்டும் காங்கிரசில் இணைவார் என தெரிகிறது.

இதுகுறித்து பேசிய உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி “ஹரக் சிங் வேறு தொகுதியில் இருந்து போட்டியிட விரும்புவதாக கூறியதோடு தனது தொகுதியை தன் குடும்ப உறுப்பினரான மருமகள் அனுக்ரிதி குசேனுக்கு தனது தொகுதியை வழங்குமாறும் வற்புறுத்தினார்.

`

எங்கள் கட்சி தேசியம் நாட்டின் வளர்ச்சியை சார்ந்தும் வாரிசு அரசியல் என்ற பாதையில் இருந்து விலகியும் செயல்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு தேர்தலில் ஒரு சீட்டு மட்டுமே வழங்கப்படும். இதில் எந்த சமரசமும் இல்லை” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

```
```

ஹரக் சிங் 2017 வரை காங்கிரசில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த மாதம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஹரக் சிங் தான் ராஜினாமா செய்யப்போவதாக கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

……உங்கள் பீமா