“மத்திய அரசு விவசாயிகளுக்கு உரங்களை மானிய விலையில் வழங்கி வருகிறது. மேலும் சில உங்களுக்கு சப்சிடியும் கொடுக்கிறது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ் மெகா ஊழலில் ஈடுபட்டுள்ளது” என ராஜஸ்தான் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
ராஜஸ்தான் காங்கிரஸ் முதலைவராக இருப்பவர் அசோக் கெலாட். இவரது சகோதரர் அக்ராசென் கெலாட். இவர் தனது அனுபம் க்ரிஷி என்ற நிறுவனத்தின் மூலம் 2007 முதல் 2009 வரை MOP எனப்படும் மியூரியேட் ஆப் பொட்டாஷை அரசிடமிருந்து போலி பெயரில் மானிய விலையில் வாங்கி வியட்நாம் மலேசியா உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறார்.
அமலாக்கத்துறை சார்பில் குஜராத், மேற்கு வங்கம், டெல்லி, ராஜஸ்தானில் ஜோத்புர் உள்ளிட்ட ஆறு இடங்களில் சோதனை நடத்தி இந்த உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. இந்த வழக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
கடந்த வாரம் அக்ராசென் கெலாட்டை கைது செய்ய ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அதையடுத்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் கூறியது. அமலாக்கத்துறை சார்பில் வருகிற திங்கட்கிழமை ஆஜராக வேண்டும் என முதல்வரின் சகோதரருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் 60 கோடி அபராத தொகையை கட்டவேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறது.
“விவாசாயிகளுக்காக போராடுகிறோம் என சொல்லி அப்பாவி விவசாயிகளுக்கு மானிய விலையில் கிடைக்க வேண்டிய உரங்களை இப்படி அநியாயமாக ஏற்றுமதி செய்து எங்களின் வயிற்றில் அடித்துவிட்டார்களே படுபாவிகள்” என ராஜஸ்தான் விவசாயிகள் நலச்சங்க உறுப்பினர்கள் கண்ணீர்மல்க கூறுகின்றனர்.
….உங்கள் பீமா
#fertilizerscam #congress #ashokghelot #rajasthancm