Sunday, December 3, 2023
Home > செய்திகள் > முதலமைச்சர் மனைவிக்காக திறக்கப்பட்டதா திருச்செந்தூர் கோவில்..?? வலுக்கும் சர்ச்சை..!

முதலமைச்சர் மனைவிக்காக திறக்கப்பட்டதா திருச்செந்தூர் கோவில்..?? வலுக்கும் சர்ச்சை..!

“தமிழகம் முழுவதும் டாஸ்மாக் தியேட்டர் ஷாப்பிங் மால் பள்ளி கல்லூரி என அனைத்தும் இந்த ஊரடங்கு தளர்வில் திறக்கப்பட்டிருக்கிறது. மாற்று மத வழிபாட்டு தளங்களும் திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்துக்களின் கோவில்கள் மட்டும் வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை என ஏதோ அலுவலகம் போல நினைத்து விடுமுறை அறிவித்திருக்கிறது திமுக” என பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.

தமிழக பிஜேபி தலைவர் கே அண்ணாமலை அறவழி போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வழிபாட்டு தலங்களை பக்தர்களுக்காக திறக்க வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

`

இந்நிலையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் மற்றும் முக ஸ்டாலின் மனைவி துர்கா ஆகிய இருவரும் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சிறப்பு தரிசனம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கிறது. சாமானிய பக்தர்களுக்கு மூடப்படும் ஆலயம் அதிகார வர்க்கத்துக்கு திறக்கப்படுமா என திருச்செந்தூர் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

```
```

…..உங்கள் பீமா

#durgastalin #ptr #tiruchendurtemple