Monday, May 11, 2026
Home > செய்திகள் > ஜாமீன்லாம் குடுக்க முடியாது..! தவ்ஹீத் ஜமாஅத்துக்கு நீதிமன்றம் சம்மட்டியடி..!

ஜாமீன்லாம் குடுக்க முடியாது..! தவ்ஹீத் ஜமாஅத்துக்கு நீதிமன்றம் சம்மட்டியடி..!

பெங்களுர் : இஸ்லாமிய பெருமக்களின் புனித நூலாக கருதப்படும் குர்ரானில் சொல்லாததை கூட நடைமுறைப்படுத்த முயற்சிப்பதில் தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அதுபோன்ற அமைப்புகள் முயன்றுவருவதாக சமீபத்தில் ஒரு இஸ்லாமிய மதகுரு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல கேரளகவர்னர் ஆரிப் கானும் ஹிஜாப் அணிவது குறித்து எந்த ஒரு குறிப்பும் குர்ரானில் இல்லை என தெரிவித்திருந்தார்.


இதனிடையே கர்நாடகா மாநிலம் உடுப்பி அருகே உள்ள PSU கல்லூரியில் திடீரென ஏழு மாணவிகள் ஹிஜாப் அணிந்து பிரச்சினைக்கு அடிகோலினர். இந்தியா முழுவதும் சர்ச்சையாக்கி பெரும் வன்முறையை தூண்ட நினைத்த சிலருக்கு கர்நாடக அரசு மற்றும் நீதிமன்றங்கள் கடிவாளம் போட்டது. மேலும் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கே நேரடி மிரட்டல் விட ஆரம்பித்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் ரஹ்மத்துல்லா மற்றும் உஸ்மானி ஆகிய இருவர் மேடையில் பேசுகையில் நீங்கள் பத்திரமாக இருப்பீர்களா. எங்கள் கோபத்தை தாங்குவீர்களா என்றும் பேசியதோடு கொலைமிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. அவர்கள் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலானது.


அதைத்தொடர்ந்து கொடுக்கப்பட்ட புகாரில் பெங்களுர் போலீசார் இருவரையும் கைதுசெய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் அளிக்குமாறு இருவரும் நீதிமன்றத்தை நாடினர். அரசுத்தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் பாட்டீல் ” குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் மிக தீவிரமானவை. அவர்களை காவலில் வைப்பது அவசியம்” என வாதிட்டார்.வாதங்களை கேட்டறிந்த நீதிபதி வி.பிரகாஷ் நெல்லையை சேர்ந்த ரஹ்மத்துல்லா மற்றும் முகம்மது உஸ்மானி ஆகிய இருவரின் ஜாமீன் மனுவையும் நிராகரித்து
உத்தரவிட்டார்.