கேரளமாநிலம் ஆலப்புழா மாவட்ட CPM செயலாளராக இருப்பவர் நாசர். இவர் மீது பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. கடந்தவாரம் நடந்த கட்சி கூட்டத்தில் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
கேரளா அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பணமோசடி நடந்ததாக புகார் எழுந்து சிபிஐ அந்த வழக்கை விசாரித்துவருகிறது. கண்ணூர் கூட்டுறவு வங்கியில் 100கோடிக்கும் மேலான பண மோசடி நடந்திருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில் நாசர் தனது மனைவியை ஆலப்புழா கூட்டுறவு வங்கியில் பெர்சனல் செகரெட்டரியாக பணி நியமனம் செய்துள்ளார். மேலும் அதே நாளில் தனது குடும்ப உறுப்பினர் இருவருக்கு கூட்டுறவு வங்கியில் பணிநியமனம் செய்ததாக கூறப்படுகிறது.
நாசர் தனது மகனையம் கூட்டுறவு வங்கியில் அரசு அதிகாரியாக நியமனம் செய்துள்ளார். இந்த பதவி வறுமையில் வாடும் குடும்பத்தில் ஒருவருக்கு கொடுக்கப்படவேண்டும். ஆனால் கம்யூனிஸ்ட் அரசு தங்கள் கட்சிக்காக சிறை சென்றவர் மற்றும் கட்சிக்காக கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்திற்கு இந்த பணியை வழங்கி வந்தது.
இதில் நாசர் தலையிட்டு தனக்கு சாதகமாக குடும்பத்தினருக்கு பணிநியமனம் செய்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
…..உங்கள் பீமா
#cpm #kerala #nazer #cooperativebank