Monday, December 2, 2024
Home > செய்திகள் > வீரமரணமடைந்த வீரரின் இறுதிமரியாதை..! தேச பக்தியை தூண்டிய தந்தையின் சபதம்..! நெஞ்சை உருக்கும் வீடியோ..!

வீரமரணமடைந்த வீரரின் இறுதிமரியாதை..! தேச பக்தியை தூண்டிய தந்தையின் சபதம்..! நெஞ்சை உருக்கும் வீடியோ..!

17-11-21/ 12.05pm

மணிப்பூர் : மணிப்பூர் மாநிலத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த வீரரின் இறுதிமரியாதையில் அந்த வீரரின் தந்தை பேசியது அனைவரின் தேச பக்தியை மேலும் தூண்டும் விதமாக அமைந்தது.

மணிப்பூர் மாநிலம் சுராசந்த்புர் மாவட்டத்தில் கடந்த 13ம் தேதியன்று அஸ்ஸாம் ரைபிள் பிரிவை சேர்ந்த ஏழு வீரர்கள் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர். இதில் கமாண்டிங் அதிகாரி விப்லப் திரிபாதி அவரது மனைவி மற்றும் மகன் உட்பட ஏழுபேர் வீர மரணம் எய்தினர். அசாம் ரைபிள் படையை சேர்ந்த வீரர்கள் வருவதையறிந்த தீவிரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டும் IED குண்டுகளை எறிந்தும் படுகொலை சம்பவத்தை நிகழ்த்தினர்.

இந்த தாக்குதலுக்கு பின்னால் லிபரேஷன் ஆரமி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து நடந்த என்கவுண்டரில் மூன்று தீவிரவாதிகள் பத்திரமாக விண்ணுலகம் அனுப்பிவைக்கப்பட்டனர். மீதம் இருப்பவர்களை பத்திரமாக வழியனுப்பிவைக்க போலீஸ் தீவிரவேட்டையில் இறங்கியுள்ளது.

`

இந்நிலையில் வீரமரணமடைந்த காத்நேய் கொன்யாக் எனும் வீரரின் இறுதிச்சடங்கில் வீரது தந்தை உணர்ச்சிபொங்க பேசியது பார்ப்பவர்களை புல்லரிக்க வைத்தது. “தாய் நாட்டின் பாதுகாப்பிற்காக எனது இரண்டு மகன்களையும் அனுப்பினேன்.

```
```

அதில் ஒருவன் தனது இன்னுயிரை தேசப்பாதுகாப்பிற்க்காக கொடுத்துள்ளான். எனது இன்னொரு மகன் இராணுவத்தில் தேச சேவை ஆற்றுகிறான்” என கணீர் குரலில் கம்பீரமாக கூறினார். தேசத்தில் புல்லுருவிகள் ஆயிரம் பேர் இருந்தாலும் 100 கோடி பேருக்கும் மேலான தேசபக்தர்கள் இருக்கிறார்கள் என இந்த சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது.

………உங்கள் பீமா