19-12-21/18.15pm
மஹாரஷ்டிரா : பால்தாக்கரே வார்த்தெடுத்த நவீன மஹாராஷ்டிராவை உத்தவ் தாக்கரே அழித்துக்கொண்டிருக்கிறார் என பொதுமக்களே கண்ணீர் வடிக்கும் அளவிற்கு தனது ஆட்சியை திறம்பட 23ம் புலிகேசிபோல நடத்திவருகிறார் உத்தவ் தாக்ரே.
சிவசேனா உள்துறை அமைச்சரே தொழிலதிபர்களை மிரட்டி பணம் வசூல் செய்து பின்னர் தலைமறைவானார். மும்பை கமிஷனரை இன்னும் கண்டே பிடிக்கமுடியவில்லை. சுஷாந்த் சிங் ராஜ்புட் வழக்கில் கிசுகிசுக்கப்பட்ட தாக்ரேயின் மகன் மற்றும் அமைச்சர் ஆதித்ய தாக்ரே பெயர் முற்றிலும் விடுபட்டுபோனது. மேலும் மர்ம மரண வழக்கு திசைமாறி போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு சென்றது.

ஒருபுறம் மஹாராஷ்டிராவில் நிதிச்சுமை அதிகரிக்கிறது என கூறிவிட்டு தனது கூட்டணிக்கட்சியான காங்கிரசை சேர்ந்த தலைவர் ஒருவர் நடத்தும் கரும்பு ஆலைக்கு பலகோடி ரூபாய் கடன் உத்திரவாதம் வழங்கி தனது விசுவாசத்தை காண்பித்திருக்கிறது சிவசேனா. இந்நிலையில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் சமூக குற்றங்கள் மாநிலத்தில் தலைவிரித்தாடுகிறது.

இதனிடையே யாவாத்மால் மாவட்டத்தில் இஸ்லாமிய இறைநம்பிக்கைக்கு எதிராக யாரோ சமூகவலைத்தளத்தில் பதிவிட்டதாக கூறி கையில் வாள் மற்றும் கொடூர ஆயுதங்களோடு உமர்க்கெட் பகுதியில் நுழைந்த மர்ம மார்க்க கும்பல் இந்துக்களில் கடைகள் மற்றும் வீடுகளில் கல்லெறிந்து தீயிட்டுக் கொளுத்தினர்.மேலும் பல வாகனங்களை தீக்கிரையாக்கினர். அதனால் அந்த பகுதியே போர்க்களமானது. மேலும் தடுக்க வந்த போலீசாரை தாக்கியதாகவும் காவல்நிலையத்தில் மீது தாக்குதல்நடத்தியதாகவும் உள்ளூர் செய்திகள் கூறுகின்றன..

யாரையும் இதுவரை கைதுசெய்யவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இப்போது யாராவது மதமென பிரிந்தது போதும் என அந்த கும்பல் முன்னர் நின்று பாடினால் தேவலை. நிலைமை கட்டுக்குள் வரும் என்கிற நம்பிக்கை வரும்.
….உங்கள் பீமா