Friday, March 29, 2024
Home > செய்திகள் > திமுக அலுவலகத்தில் பலான வேலை..!? வெளியான வீடியோ..!?

திமுக அலுவலகத்தில் பலான வேலை..!? வெளியான வீடியோ..!?

5-12-21/10.28am

திருப்பூர் : திமுக அலுவலகத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட திமுக தொண்டர்கள் சில கையும் களவுமாக பிடிபட்டனர். ஆளும் கட்சியினரே இந்த செயலில் ஈடுபட்டிருப்பது தமிழக அரசுக்கு பெருத்த தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் எம்.ஜி.பி தியேட்டர் அருகே அமைந்துள்ளது திமுக அலுவலகம். இங்கு சட்டத்திற்கு புறம்பான செயல்களில் திமுக தொண்டர்கள் ஈடுபட்டுவருவதாக எழுந்த தொடர் புகார்களை அடுத்து திருப்பூர் காவல் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் பல குடும்பங்களை சீரழித்து பலரது தற்கொலைக்கு மூல காரணமாக இருந்த லாட்டரி சீட்டு விற்பனை தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்டது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவந்து தமிழகத்தில் விற்பனை செய்யவும் அதிகாரபூர்வ தடை விதிக்கப்பட்டது.

`

தற்போது லாட்டரி சீட்டுகள் விற்பனை மறைமுகமாக பல இடங்களில் விற்பனையாகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் திருப்பூர் திமுக அலுவலகத்தில் திமுக தொண்டர்கள் சிலர் கள்ளத்தனமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து அப்பாவி ஏழை மக்களுக்கு ஆசை காட்டி விற்பனை செய்துள்ளனர். அடுத்தடுத்து எழுந்த புகாரை அடுத்து காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

```
```

அங்கிருந்த மூன்று பேரை கையும் களவுமாக பிடித்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து செல்போன்கள் லாட்டரிகள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.

….உங்கள் பீமா