19-12-21/17.10pm
மத்தியபிரதேசம் : தன்னுடைய விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காத ஆத்திரத்தில் தீயொடுயூக் கொளுத்திய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
விவசாயிகளின் நலனுக்காக அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த பாரத பிரதமர் எடுத்த சீரிய முயற்சிகள் எல்லாமே காங்கிரஸ் போன்ற கட்சிகளின் தூண்டுதலால் விவசாயிகள் போர்வையில் போராட்டக்காரர்கள் நடத்திய கலவரத்தால் சகலமும் தவிடுபொடியானது.
இதில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் உண்மையான விவசாயிகள் மட்டுமே. அந்த சட்டத்தை மக்களுக்கு புரியவைக்க பிஜேபியினருக்கு தெரியவில்லை அல்லது அதை குறை சொல்ல எதிர்க்கட்சிகளுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. இந்த சட்டங்களில் உள்ள மிக முக்கிய நன்மை என்னவெனில் விளைபொருட்களின் விலையை எந்த ஒரு இடைத்தரகர் குறுக்கீடும் இல்லாமல் நேரடியாக விவசாயியே நிர்ணயிக்கலாம் என்பதே.

அதைவிட மிக மிக முக்கியமான ஒன்று காஷ்மீரிலிருக்கும் விவசாயி கன்னியாகுமரியில் இருக்கும் வியாபாரியிடம் விற்கலாம். மேலும் அரசு நிர்ணயிக்கும் அடிப்படை விலைக்கான நிதி நேரடியாக பயனரின் வங்கிக்கணக்குக்கே நேரடியாக செலுத்தப்படும். இதையெல்லாம் அறியாத அப்பாவி விவசாயிகள் போராட்டக்காரர்களின் வலையில் விழுந்து தற்போது இன்னலுக்கு ஆளாகி வருகிறார்கள்.

மஹாராஷ்டிரா பஞ்சாப் ஹரியானா மற்றும் சண்டிகார் போன்ற மாநிலங்களில் இடைத்தரகர் வேலையை செய்வது சரத்பவாரின் மகள் ஆவார். இவரும் இடைத்தரகரே. இவரைப்போல பல அரசியல்வாதிகளின் வாரிசுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் விவசாய கொள்ளையில் ஈடுபட்டுவருவதாக சில விவசாய சங்கங்கள் குரல்கொடுத்து வருகின்றன.

மேலும் இவர்களிடம் வருடம்தோறும் புழங்கும் பணத்தின் மதிப்பு 25000 கோடிகளாகும். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க நினைத்து தோற்றுப்போய்விட்டார் மோடி. விவசாயிகளை காப்பாற்ற நினைத்து முடியாமல் தன்னைத்தானே நொந்து கொண்டு பேசிய வார்த்தைகள் நிதர்சனம். அவரின் கூற்றுபோலவே தற்போது மத்யப்ரதேசத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

சங்கர் சிரபிரா எனும் இளம் விவசாயி இன்று தன்னுடைய விளைபொருளான பூண்டு எடுத்துக் கொண்டு மாண்ட்ஸ்சுர் எனும் இடத்தில் உள்ள இடைத்தரகர்கள் ஏலம் விடும் இடத்திற்கு சென்றார். ஆறுலட்சம் பெறுமான விளைபொருளுக்கு ஒரு லட்சம் விலை பேசியிருக்கிறார்கள் இடைத்தரகர்கள். அதனால் கொதித்த சங்கர் 160 கிலோ பூண்டுகளை தீயிட்டு கொளுத்தினார்.

மேலும் உரிய விலை கிடைக்கவில்லை என கதறி அழுதார். இப்போதாவது வேளாண்சட்டங்களின் அவசியத்தை உண்மையான விவசாயிகள் புரிந்துகொள்வார்களா அல்லது இவரைப்போல விலைகிடைக்காமல் தீயிட்டு எரிப்பார்களா பார்க்கலாம் என நடுநிலையாளர்கள் கூறிவருகின்றனர். மேலும் விவசாய சட்டங்களை வாபஸ் வாங்கியதால் விவசாயிகள் யாரும் தடாலடியாக கோடிகோடியாக பணம் சம்பாதிக்கவில்லை எனவும் கூறுகின்றனர்.
…..உங்கள் பீமா