Saturday, July 13, 2024
Home > செய்திகள் > மக்களுக்கு நன்றியே இல்லை..! திமுக அமைச்சர் காட்டம்..!?FACT CHECK

மக்களுக்கு நன்றியே இல்லை..! திமுக அமைச்சர் காட்டம்..!?FACT CHECK

19-1-22/16.30pm

சென்னை : பொங்கல் பரிசு குறித்த கேள்விக்கு மக்களுக்கு நன்றியே இல்லை என திமுக அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தமிழக திமுக அரசு பொங்கலுக்கு வழங்கிய தொகுப்பில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பல பிஜேபி தலைவர்களும் குற்றம் சுமத்தி வருகின்றனர். இதுகுறித்து பிஜேபி செய்தி தொடர்பாளர் “பொங்கல் தொகுப்பில் தமிழகத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது.

பல இடங்களில் இந்த தொகுப்பில் உள்ள பொருட்களில் கலப்படம் மிகுந்து காணப்படுகிறது. மிளகுபாக்கெட்டில் இலவம்பஞ்சு கொட்டை, மிளகாய்த்தூளில் மரத்தூள் உருகிப்போன வெல்லம் உப்பில்லாத உப்பு என மக்களை மோசடி செய்து ஏமாற்றத்திற்கு உள்ளாகியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது தொடர்ந்து பல்வேறு இடங்களில் இருந்து பலவிதமான குற்றசாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளது.இதற்கெல்லாம் பின்னணியில் யார் இருக்கிறார்கள். யார் அழுத்தம் கொடுத்தது. முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன் ” என கேள்வியெழுப்பியுள்ளார்.

`

இந்நிலையில் செய்தியாளர்களுடன் நடந்த ஒரு சந்திப்பில் திமுக அமைச்சர் சக்ரபாணி ” பொங்கல் பரிசை முதல்வரே பார்த்து உருவாக்கினார். ஆனால் மக்களுக்கு நன்றி இல்லை” என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1483740125431762944?t=bwWdv5hvogvvSbyFnKSfGg&s=19

பொங்கல் தொகுப்பு தரமற்றதாக இருப்பதாக கூறி ஊர்மக்கள் சாலையில் பொருட்களை கொட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

```
```

அமைச்சர் கூறியதாக சுற்றும் இந்த புகைப்பட மீம் குறித்த எந்த ஒரு செய்தியும் தொடர்புடைய செய்திநிறுவன இணையப்பக்கங்களில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

…..உங்கள் பீமா