Friday, March 29, 2024
Home > செய்திகள் > போட்டோஷாப் ட்வீட் போட்ட முக ஸ்டாலின்..! முதல்வரே இப்படி பண்ணலாமா..??

போட்டோஷாப் ட்வீட் போட்ட முக ஸ்டாலின்..! முதல்வரே இப்படி பண்ணலாமா..??

9-11-21/ 17.00pm

சென்னை; போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ட்வீட் செய்து நீக்கியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல இடங்களில் மழைநீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதையடுத்து பிஜேபி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மக்களுக்கான நிவாரணப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் படகு மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிஜேபி தலைவரான எஸ்.ஆர்.சேகர் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து முதல்வருக்கு கேள்விகள் எழுப்பியிருந்தார். அதனால் அவருக்கு தொடர் மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் பகிர்ந்து போட்டோஷாப் பண்ணப்பட்ட புகைப்படம் என திமுகவினர் விமர்சித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

`

இதனிடையே இன்று நண்பகல் முதல்வர் முக ஸ்டாலின் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் ” சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவா இளங்கோ சாலை பேப்பர் மில்ஸ் சாலை சந்திப்பில் கனமழையால் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணிகளை முதல்வர் முக ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்டது என உறுதியானதாக தெரிகிறது. அதையடுத்து முதல்வரே இப்படி பண்ணலாமா என நெட்டிசன்கள் கேள்வியெழுப்ப தொடங்கினர்.அதையடுத்து அந்த பதிவை நீக்கிவிட்டார் முக.ஸ்டாலின் அவர்கள்.

```
```

இது குறித்து எஸ் ஜி சூர்யா தனது பதிவில் “போட்டோஷாப் பதிவை ‘டெலிட்’ செய்து விட்டு ஓட்டம் பிடித்த தமிழ்நாடு முதல்வர். வாழ்க்கை முழுக்க இனி எந்த உ.பி-யும் போட்டோஷாப்ன்னுலாம் வாயே திறக்க கூடாது.” என பதிவிட்டுள்ளார்.
.

Tweet URL: https://twitter.com/CMOTamilnadu/status/1457961281432915968

……உங்கள் பீமா