19-12-21/13.11pm
மஹாராஷ்டிரா : மஹாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள மஜால்கோன் ஊரில் நடைபெற்ற இந்த சம்பவம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. 250 கும் மேற்பட்ட நாய்களை குரங்குகள் கொன்று பழிவாங்கிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
கடந்த மாதம் ஒரு குரங்கு கூட்டத்திலிருந்த குட்டி குரங்கு ஒன்று வழிதவறி போய்விட்டது. அப்போது அதை சுற்றிவளைத்த தெருநாய்கள் அந்த பிஞ்சு குரங்கை கடித்து குதறி சாகடித்தன. சிறிது நேரத்தில் அந்த பகுதிக்கு வந்த குரங்கு கூட்டம் அதை கண்டு திகைத்தது. அடுத்து நடந்த சம்பவங்கள் ஊர்மக்களையே மிரட்சியடைய வைத்தது.
குரங்கு கூட்டத்தில் என்ன பேசி முடிவெடுக்கப்பட்டதோ தெரியவில்லை. அன்றிலிருந்து ஊரில் உள்ள குட்டி நாய்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டன. தினமும் ஐந்தாறு குட்டி நாய்கள் கொல்லப்படுவதை கண்டு ஊர்மக்கள் அச்சமடைந்தனர். ஊர்வாசி சீதாராம் நய்பால் கூறுகையில் “என் வீட்டு முற்றத்தில் எனது நாய்க்குட்டி கதறும் சத்தம் கேட்டது. அப்போது ஓடிப்போய் பார்த்தேன் அங்கு ஒரு குரங்கு கூட்டம் எனது குட்டியை தூக்க முற்ப்பட்டது.
அதை தடுக்க முயன்ற என்னை ஒரு குரங்கு காயப்படுத்திவிட்டு எனது நாயை தூக்கிக்கொண்டு மரத்தின் உச்சிக்கு சென்றுவிட்டது. பின்னர் அங்கிருந்து குட்டியை கீழேபோட்டு கொன்றுவிட்டது. நான் தொடர் சிகிச்சையில் இருக்கிறேன். குரங்கு கடித்ததாக ஏற்பட்ட காயம் இன்னும் ஆறவில்லை” என கூறினார்.
வனத்துறையினர் குரங்குகளை தேடி ஊர்முழுக்க அலைந்தபோது ஒரு குரங்கும் கண்ணில்படவில்லை என்பது மேலும் ஆச்சர்யம். தனது கூட்டத்தில் ஒரு குட்டியை கொன்ற நாய் வம்சத்தையே பழிவாங்கும் குரங்கு கூட்டத்தை மக்கள் அச்சத்துடன் பார்க்கின்றனர்.
இதேபோல கர்நாடக மாநிலம் சிக்மளூர் பகுதியில் ஒரு ஆட்டோ டிரைவர் தன்னை வனத்துறையினரிடம் பிடித்துக் கொடுத்துவிட்டார் என கூறி அவரை பழிவாங்க 300 கிலோமீட்டர் பயணப்பட்டு அவரை தாக்கிய சம்பவம் கடந்த செப்டம்பரில் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இத்தனை உயிர்கள் பலியாக காரணம் மோடியின் அரசு தான். அதனால் மோடி பதவி விலகவேண்டும் என எதிர்க்கட்சிகள் ஏன் இன்னும் குரல் எழுப்பவில்லை என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
…….உங்கள் பீமா