Tuesday, April 22, 2025
Home > செய்திகள் > செய்தி ஒன்று..! உருட்டு இரண்டு..! தமிழக ஆளுநரையே பதம் பார்த்த திமுக..!

செய்தி ஒன்று..! உருட்டு இரண்டு..! தமிழக ஆளுநரையே பதம் பார்த்த திமுக..!

28-11-21/11.21am

சென்னை : திமுக அரசு சொல்வது செய்வதும் வேறுபட்டு இருக்கிறது என எதிர்க்கட்சிகள் தொடர் விமர்சனத்தை முன்வைத்து வரும் வேளையில் ஆளுநர் சந்திப்பு பற்றிய ஒரே செய்தியை இரண்டாக திரித்து அரசே வெளியிட்டிருப்பது நகைப்பை உண்டுபண்ணியுள்ளது.

தமிழகத்தில் மழை மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துக் கொண்டிருக்க திமுக அமைச்சர்கள் எம்பிக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் தொகுதிப்பக்கம் எட்டிப்பார்க்கவில்லை என பொதுமக்கள் குமுறி வருகின்றனர். மேலும் சென்னையை ஒட்டியுள்ள பல பகுதிகளில் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி முக்கியமான ரயில்வே நிலையத்திலும் ரோட்டோரங்களிலும் ஒதுங்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில் திமுகவின் பல்லவிகளில் முக்கியமான நீட் தேர்வு எதிர்ப்பு என்பதை சுட்டிக்காட்டி நேற்று அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் “இன்று ஆளுநரை சந்தித்த முதல்வர் முக ஸ்டாலின் நீட் விளக்கு மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

`

ஆனால் தமிழக ஆளுநர் சார்பில் ராஜ்பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” ராஜ் பவனில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அதிகாரிகளுடன் சென்னை வெள்ளம் மற்றும் மழைநீர் கட்டுப்பாடு மற்றும் வெள்ள சேதங்கள் பற்றிய ஆலோசனை நடந்தது” என தெரிவித்துள்ளது. ஒரே செய்தியை தனக்கேற்றவாறு திரித்து அரசே இப்படி வெளியிட்டிருப்பது பெருத்த நகைப்பை உண்டுபண்ணியுள்ளது.

```
```

இதுகுறித்து பிஜேபி ஐடி விங் மாநில தலைவர் நிர்மல் குமார் தனது பதிவில் “தமிழக அரசின் செய்தி குறிப்பில் நீட் கோரிக்கை, அதேநேரத்தில் கவர்னர் செய்தி குறிப்பில் மத்திய அரசிடம் வெள்ள நிதி நிவாரண கோரிக்கை. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த விடியல். சொல்வதுஒன்று செய்வதுவேறு” என குறிப்பிட்டுள்ளார்.

…..உங்கள் பீமா