Monday, December 2, 2024
Home > அரசியல் > என்ஜாய்..! பாராளுமன்றத்தை கலகலக்க வைத்த பிரதமர் மோடி..!

என்ஜாய்..! பாராளுமன்றத்தை கலகலக்க வைத்த பிரதமர் மோடி..!

8-2-22/10.25am

டெல்லி : நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாரத பிரதமர் மோடி தமிழக மக்களை பாராட்டி பேசியதோடு காங்கிரசை வெகுவாக கிண்டலடித்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய மோடியை கண்டோம் என பிஜேபியினர் கூறிவருகின்றனர்.

கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி “என்னுடைய கொள்ளு தாத்தா நேரு இந்தியா சுதந்திரம் பெற 15 வருடம் சிறையிலிருந்தார். என்னுடைய பாட்டி இந்திரா 32 குண்டுகளால் துளைக்கப்பட்டார். என்னுடைய அப்பா பல துண்டுகளாக சிதறடிக்கப்பட்டார். நாட்டின் முன்னேற்றத்திற்காக நாங்கள் எதுவேண்டுமானாலும் செய்வோம். நீங்கள் இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” என கோர்வையற்ற முறையில் திமுக போல திசைதிருப்புவது போல பேசியிருந்தார்.

நேற்று பேசிய பிரதமர் மோடி ராகுல் பெயரை கூறாமல் நேரடியாக நேருவை இழுத்தார். “பண்டிட் நேரு உலகமயமாக்கலுக்கு முன்னர் இந்தியாவின் முதல் பிரதமராக செங்கோட்டையில் பேசியது என்ன தெரியுமா. கொரியாவில் போர் நடப்பதால் இங்கு பணவீக்கம் ஏற்பட்டிருக்கிறது என கூறியது தான். மக்களுக்கு முன்னால் கைகளை கொரியா நோக்கி காண்பித்தார்.

`

அமெரிக்காவில் எது நடந்தாலும் இங்கு நமக்கு பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். விலைவாசி உயரும் என செங்கோட்டையில் மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். நினைத்துப்பாருங்கள் உலகமயமாக்கலுக்கு முன்னர் இது எவ்வளவு பெரிய சிக்கலான ஒன்று என. நீங்கள் ஆட்சியிலிருந்தால் இப்போது என்ன சொல்வீர்கள். கொரோனா தொற்று காலகட்டம் என்பதால் விலைவாசி கட்டுக்கடங்காமல் போய்விட்டது என கூறுவீர்கள்.

```
```

நேருவை பற்றி நான் குறிப்பிடவில்லை என கூறினீர்கள். உங்கள் விருப்பத்தை இன்று நிறைவேற்றிவிட்டேன். பண்டிட் நேருவை உங்களுக்காக நினைவு கூர்ந்துள்ளேன். மகிழ்ச்சியாயிருங்கள்” என நேரடியாக நக்கலடித்தார். அப்போது அவையில் மேசையை தட்டி கொல்லென பிஜேபி எம்பிக்கள் சிரித்தனர். உலகமயமாக்கலுக்கு முன்னர் இந்திய பொருளாதாரம் கொரியாவையும் அமெரிக்காவையும் சார்ந்திருந்தது என பொய்யான தகவலை மக்களிடையே பரப்பினார் நேரு. அதை மறைமுகமாக சுட்டிக்காட்டி பிரதமர் கிண்டலடித்தது காங்கிரசாரிடையே சலசலப்பை உண்டுபண்ணியுள்ளது.

…..உங்கள் பீமா