Tuesday, April 22, 2025
Home > செய்திகள் > ஹிஜாப் பிரச்சினை..! பயங்கர ஆயுதங்களுடன் கைதான அப்துல் மஜித் மற்றும் ரஜாப்..!

ஹிஜாப் பிரச்சினை..! பயங்கர ஆயுதங்களுடன் கைதான அப்துல் மஜித் மற்றும் ரஜாப்..!

7-2-22/16.50PM

கர்நாடகா : இத்தனை வருடங்களாக இல்லாமல் திடீரென இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்துகொண்டுதான் வருவோம் என போராட்டம் நடத்தி வருவதால் கர்நாடகத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

மேலும் பீம் ஆர்மி மாணவர்கள் நீல கலர் துணியை கழுத்தில் சுற்றிக்கொண்டு கல்லூரிக்கு வருவது தற்போது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து பேசிய கர்நாடக பள்ளி கல்வித்துறை அமைச்சர் சீருடை அனைவருக்கும் பொதுவானது. அதில் மத அடையாளங்களை அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனிடையே உடுப்பி மாவட்டம் குண்டாபூர் பியு அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்மந்தப்பட்ட குண்டாபூர் கல்லூரி வளாகத்தின் அருகே இன்று காலை முதல் பயங்கர ஆயுதங்களுடன் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிய ஐந்துபேரை காவல்துறை சுற்றிவளைத்தது. அப்போது மூன்று பேர் தப்பியோடிவிட்டனர். மாட்டிய இருவர் கையிலும் கூர்மையான ஆயுதத்தை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

`

விசாரணையில் அவர்கள் உடுப்பியை சேர்ந்தவர்கள் இல்லை என்பதும் கங்கோலி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. கைதான ரஜாப் மற்றும் ஹாஜி அப்துல் மஜித் இருவரையும் குண்டாபுர் காவல் அதிகாரிகள் இன்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

```
```

ஏற்கனவே ஹிஜாப் பிரச்சினையில் இஸ்லாமிய அமைப்புகள் பின்புலமாக செயல்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் திட்டமிட்ட கலவரத்தை உருவாக்கி மதநல்லிணக்கத்தை குலைக்கப்படும் சதி என உடுப்பி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

….உங்கள் பீமா