5-11-21/ 12.17pm
முன்பெல்லாம் நடிகர்கள் சமூகம் சார்ந்த கருத்துக்களை ஆன்மீகத்தை தமிழர் பண்பாடு கலாச்சாரம் கொண்ட கதையமைப்பை தேர்ந்தெடுத்து நடித்து வந்தனர். ரசிகர்கள் அவர்களை தலையில் வைத்து கொண்டாடினர்.
நல்ல திரைக்கதையம்சம் கொண்ட கதைகளை எப்போதும் ரசிகர்கள் கைவிட்டதில்லை. ஆனால் காலம் மாற மாற நாகரிகம் எனும்பெயரில் கதைகள் வேறுபாதைக்கு திரும்பின. திரைக்கதை மன்னன் எனும் பெயர்கொண்டு அழைக்கப்பட்ட பாக்யராஜ் கே ஒரு எடுத்துக்காட்டு.
நல்ல திரைக்கதை கொண்டு படம் எடுத்தாலும் சில ஆபாசங்களை வலிந்து திணித்துவிடுவார். ஒரு திரைப்பட காட்சியில் வாங்கி ஊழியராக இருக்கும் அவர் ஒரு பெண்ணின் வீட்டுக்கு செல்வார். அங்கு நடந்த ஒரு சிறு தவறால் அந்த பெண்ணுடன் உறவுகொண்டு விடுவார். அப்போது பின்னணியில் ஒலிக்கும் பாடல் ஒரு பக்தி பாடல். இதை தமிழக ரசிகர்கள் ரசித்தாள் வந்த வினையை தற்போது அறுவடை செய்துவருகிறோம்.
தமிழக நடிகர்கள் சமூக அக்கறை தாண்டி அரசியல் பேசுகிறேன் என்கிற போர்வையில் குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக பேசி நடித்து வருவது கேலிக்கூத்தாகியிருக்கிறது. நேற்று விஷால் நடித்த எனிமி எனும் திரைப்படம் வெளியானது.
அதன் கதை அரத பழசு என ரசிகர்கள் தலையிலடித்துக் கொள்கின்றனர். படம் ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாகிவிட்டது என புலம்புகின்றனர். இந்த நடிகர் விஷால் தான் மதுரை நகரில் திருட்டு சிடியை ஒழிக்கிறேன் என கூறி ஒருவரை கன்னத்தில் அடித்து பிரபலமானார்.
ஆனால் எந்த படமும் திருட்டுத்தனமாக வெளியாவதை அவரால் தடுக்க முடியவில்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு அவர் மதுரை பக்கம் தலைவைத்து படுக்கவில்லை என்பது குறிப்பிடவேண்டிய விஷயம். அவர் நடித்த மருது எனும் திரைப்படத்தை கூட ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரங்களிலேயே படமாக்கினர்.
நடிகர்கள் கதையமைப்பை தாண்டி அரசியல் பேசுகிறேன் எனும் பெயரில் குறிப்பிட்ட காட்சிகளை சார்ந்த கருத்துக்களை மட்டுமே கூறிவந்தால் இதுதான் நிலைமை என மக்கள் இந்த தீபாவளி பரிசாக நடிகர்களுக்கு பரிசளித்துள்ளனர்.
……ஆய்ஷா ரகுமான்.
#enemy #actor #vishal #politics