22-12-21/14.38pm
ஆந்திரா : தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை காலத்தில் தங்களது படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் வரிசைகட்டி நிற்பார்கள். 2022 பொங்கலுக்கு தற்போதே தயாரிப்பாளர்கள் தயாராகிவிட்டார்கள்.

தமிழ்த்திரையுலகில் பெரிய பட்ஜெட் படமாக அஜித்தின் வலிமை படம் பொங்கலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வருகிறது. இதனிடையே ராஜமௌலியின் பிரம்மாண்டமான படைப்பான ஆர்ஆர்ஆர் திரைப்படமும் ஜனவரி 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. டோலிவுட்டை பொறுத்தவரை ஆர்ஆர்ஆர் படத்துடன் நேரடி போட்டியாக பிரபாஸின் ராதே ஷ்யாம் என்ற திரில்லர் ரொமான்டிக் படம் மற்றும் பவன் கல்யாணின் பீம்லா நாயக் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகும் என முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது ஜனவரி 12ம் தேதி ரிலீஸ் ஆக வேண்டிய பீம்லா நாயக் படம் ஒரு மாதம் தள்ளிப்போய் பிப்ரவரி 25ம் தேதி ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர் தரப்பு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.மூன்று பிரம்மாண்ட படங்கள் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும், வசூலும் பாதிக்கும் என்பதால் தயாரிப்பாளர் சங்கம் தான் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது பீம்லா நாயக் படத்தை மஹா சிவராத்ரியை குறிவைத்து ரிலீஸ் செய்ய ஒப்புகொள்ள வைத்திருக்கிறார்கள்.

பீம்லா நாயக் படத்தின் தயாரிப்பாளர் பவர் ஸ்டார் ரசிகர்களிடம் இதற்காக மன்னிப்பு கோரி இருக்கிறார். பவர் கல்யாண் சொன்னதால் தான் இதற்கு ஒப்புக்கொண்டதாக தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். மேலும் பவன் கல்யாணின் இந்த செயலை ராஜமௌலி மனம் திறந்து பாராட்டியதாக ஆர்.ஆர்.ஆர் தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
……உங்கள் பீமா