17-11-21/ 14.35pm
சென்னை ; ஜெய் பீம் திரைப்படத்தை பற்றி அவதூறாக பேசியதாக நடிகர் சந்தானத்தை சாதிவெறி சந்தானம் என சூர்யா ரசிகர்கள் மற்றும் சில முக்கிய அரசியல் தொண்டர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
சூர்யா நடித்து வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் ஒரு பிரிவினரிடையே பலத்த வரவேற்பை பெற்றிருந்தாலும் பெரும்பான்மை மக்களிடையே வெறுப்பை உண்டுபண்ணியுள்ளது. சூர்யாவின் கடந்த சூரரை போற்று எனும் திரைப்படத்தில் ஒரு பிராமணரை தலித் என காண்பித்திருப்பார். ஆனால் உண்மைக்கதை என கூறினார்.
அதே போல குறவர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரின் கதையை இருளர் என மாற்றியதுடன் சில வில்லங்க வேலைகளையும் செய்திருக்கிறார். இது இப்படி இருக்க நடிகர் சந்தானம் நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் பேசுகையில் “திரைப்படங்களில் யாரையும் தாழ்த்தி பேசுவது முறையல்ல.
ஒருவரை உயர்த்தி காண்பிக்க வேண்டும் என்பதற்க்காக மற்றொருவரை குறைத்து சொல்வது சரியல்ல” என பொதுவான கருத்தை கூறினார். இதனால் வெகுண்டெழுந்த இணைய போராளிகள் சாதிவெறி சந்தானம் என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
https://twitter.com/prakash_prakkii/status/1460668455791648772?s=20
https://twitter.com/Saimanrajs/status/1460809923499937795?s=20
…..உங்கள் பீமா