Monday, February 10, 2025
Home > செய்திகள் > பெண்ணை துன்புறுத்திய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் மீது பாய்ந்த வழக்கு..!! இதுவா உமன் எம்பவெர்மென்ட்..?

பெண்ணை துன்புறுத்திய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் மீது பாய்ந்த வழக்கு..!! இதுவா உமன் எம்பவெர்மென்ட்..?

2-11-21/ 11.17am

முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் மற்றும் நான்கு பேர் ஒரு பெண்ணை துன்புறுத்தியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் காங்கிரஸ் முன்னாள் ஜவுளித்துறை அமைச்சராக இருந்தவர் ஆரிப் நசீம் கான். ஐவரும் இவருடன் சேர்ந்து நான்குபேரும் ஒரு பெண்ணை தகாத வார்த்தையில் திட்டி ஆபாசமாக பேசி துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து கடந்த அக்டோபர் மாதம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

புகாரை ஏற்றுக் கொண்ட சகினாகா காவல்நிலைய அதிகாரிகள் ஜீரோ எப்ஐ ஆர் என பதிவு செய்துள்ளனர். அதையடுத்து அந்தேரி காவல் நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. அதை தொடர்ந்து இந்திய தண்டனை சட்டம் 34(பொது நோக்கத்திற்க்காக பலரால் செய்யப்பட்ட செயல்) 323( தன்னிச்சையாக காயப்படுத்துதல் ) 354 ( மதிப்பை சீர்குலைக்கும் நோக்கத்தில் பெண்ணை தாக்குவது )

`

504( ஆத்திரமூட்டல் ) 506 (குற்றம் சார்ந்த மிரட்டல் ) 509 ( பெண்ணின் மானத்தை சீண்டும் வகையான செயல் அல்லது சைகை) ஆகிய ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. “உத்திப்பிரதேசத்தில் வரவிருக்கும் தேர்தலை மையமாக வைத்து கோவில் கோவிலாக சுற்றும் பிரியங்காவும் ஆதாரபூர்வமில்லாத குற்றசாட்டை எழுப்பிவரும் ராகுலும் தங்கள் தலைவர்கள் மற்றும் தங்கள் கட்சி ஆளும் மாநிலங்களில் நடக்கும் அவலங்களை கண்டுகொள்ள மறுக்கிறார்கள்.

உமன் எம்பவர்மண்ட் பற்றி பேசும் காங்கிரசில் பெண்களுக்கு எப்போதுமே பாதுகாப்பில்லை” என பிஜேபியினர் விமர்சித்து வருகின்றனர்.

```
```

…..உங்கள் பீமா

#காங்கிரஸ் #மஹாராஷ்டிரா #ஆரிப்நசீம்கான் #congress #maharastra #arifnaseemkhan #molestation