தமிழகத்தில் வருகிற ஆறாம் தேதி மற்றும் ஒன்பதாம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் சுயேச்சி வேட்பாளர்கள் உட்பட பல அரசியல் கட்சி வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் எழுந்துள்ளது.
சவ்ங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரு ஓட்டுக்கு 2000 ரூபாய் வரை பணம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு சிலர் தினகரன் பார்முலாவை பயன்படுத்தி 20 ரூபாய் கொடுத்து அந்த சீரியல் நம்பரை காண்பித்து அருகில் உள்ள பல்பொருள் அங்காடியில் 25 கிலோ அரசி மற்றும் 5 லிட்டர் சமையல் எண்ணெய் மற்றும் 10 கிலோ கோதுமை மாவு வாங்கிக்கொள்ளலாம் எனவும் சொல்வதாக மக்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.
சென்னையை சுற்றியுள்ள ஊராட்சிகளில் இந்த அவலம் நடைபெறுகிறது. இது போதாதென்று ஒவ்வொரு ஊராட்சியில் தேர்தலையொட்டி திடீரென புதிய வாக்காளர்கள் முளைப்பதாக புகார் எழுந்துள்ளது. வண்டலூர் தாலுகா காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம் பகுதியில் இந்த ஒரு மாதத்தில் மட்டும் திடீரென 800 புது வாக்காளர்கள் அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் மண்ணிவாக்கம் நெடுங்குன்றம் கீரப்பாக்கம் பாண்டூர் உள்ளிட்ட பகுதிகளிலும் செங்கல்பட்டு மாவட்டத்திலும் திடீர்ன்னு வாக்காரால் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த திடீர் வாக்காளர் அதிகரிப்பு ஏதேனும் உள்நோக்கமா என தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்திவருகின்றனர்.
…..உங்கள் பீமா
#electoincommissionofindia #localbodyelection #tamilnadu