திமுக அரசு இந்துவிரோத போக்கை கடைப்பிடித்து வருகிறது என எதிர்க்கட்சிகள் குற்றசாட்டிவரும் நிலையில், இந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தடை விதித்து திமுக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்க்கு இந்து அமைப்பினர் உட்பட பல இந்து ஆர்வலர்கள் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக நிஜேபி தலைவர் கே அண்ணாமலை விநாயகர் சதுர்த்தி நடந்தே தீரும் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில் புதிய தமிழக கட்சி நிறுவனரான டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் திமுகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா கட்டுப்பாடுகள் இன்னும் முழுமை பெறாத நிலையில், சில கூடுதல் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி அளிப்பதே சரியானதாக இருக்க முடியும். அதை விடுத்து விநாயகர் சதுர்த்தியை வீட்டிற்குள் வைத்துத் தான் கொண்டாட வேண்டும்.
நீர்நிலைகளில் கரைக்கவோ அனுமதி இல்லை என மாநில அரசு தெரிவிப்பதை உள்நோக்கம் கொண்டதாகவே கருத முடியும். நாங்கள் ’திராவிட அரசு’ விநாயகர் சதுர்த்தி என்பது ’ஆரிய விழா’ என்றெல்லாம் இன வேறுபாடு காட்டி அதற்குத் தடை விதிக்கப்படுமேயானால் அது அபத்தமாகிவிடும்.” என தெரிவித்துள்ளார்
….உங்கள்பீமா
pic credit ; tamil asia net