24-2-22/10.23am
இந்திய அஞ்சல் துறையில் தமிழகத்தில் 29 டிரைவர்கள் நேரடியாக நியமிக்க உள்ளனர். இதற்கு மாதம் 19,900 முதல் 63,200 வரை சம்பளம் வழங்கப்படும்.
இதற்கு கல்வி தகுதியாக 10 வகுப்பு கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 27 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு நேர்முகத் தேர்வு மட்டுமே நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் www.indiapost.gov.in என்ற அதிகாரபூர்வ இணையத்தளம் முலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து அதில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு 15-3-2022 முன் அனுப்பி வைக்கவும்.
அதே போல கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் மற்றும் நீலகிரி அஞ்சல் கோட்டத்தில் 17 ஸ்டாப் கார் டிரைவர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதற்கு 18 முதல் 56 வயதுக்கு உட்பட்டவர்கள் 10/3/2022 குல் விண்ணப்பிக்கலாம். https://www.indiapost.gov.in/VAS/Pages/Content/Recruitments.aspx?Category=Recruitment என்ற இணையதளத்தில் விவரங்களை அறியலாம்.
செளந்தரராஜன் சேதுராமன், நங்கநல்லூர்
