Tuesday, October 15, 2024
Home > அரசியல் > சட்டசபை கட்டிடத்தில் தொழுகை நடத்த புதிய அறை..! சர்ச்சையை கிளப்பும் முதல்வர் அறிக்கை..!

சட்டசபை கட்டிடத்தில் தொழுகை நடத்த புதிய அறை..! சர்ச்சையை கிளப்பும் முதல்வர் அறிக்கை..!

செக்யூலரிஸம் என்ற வார்த்தையை தங்களது அரசியல் லாபத்துக்காக குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் ஒட்டு வங்கிக்காக அரசியல் தலைவர்களால் பயன்படுத்தப்படுகிறது என பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.

அதற்கேற்றாற்போல தமிழகத்திலும் இஸ்லாமிய பண்டிகையை ஒட்டி ஊரடங்கு அறிவிக்கப்படாமலும், விநாயகசதுர்த்தியை கொரோனாவை காரணம் காட்டி தடை செய்ததாகவும் பிஜேபியினர் குற்றசாட்டை முன்வைக்கின்றனர்.

`

இந்நிலையில் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வெளியிட்ட ஒரு அறிவிப்பு மாநிலத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சட்டசபையில் இஸ்லாமியர் தொழுகை கூடம் அமைக்கப்படும் என முதல்வர் கூறியதை அடுத்து பிஜேபியினர் ஆஞ்சநேயர் கோவில் ஒன்றையும் எழுப்பவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

```
```

இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மாநில பிஜேபி தலைவர் சிபி.சிங் ” பிஜேபி எந்த மதத்திற்கும் எதிரானதல்ல நமது அரசியலமைப்பின்படி ஒவ்வொருவரும் அவரவர் நம்பிக்கையை பின் பற்ற சுதந்திரம் இருக்கிறது.ஆனால் சட்டசபை என்பது ஜனநாயகத்தின் கோவில் ஆகும். எந்த குறிப்பிட்ட மதத்திற்கும் சொந்தமானது அல்ல. சபாநாயகரால் நமாசுக்கு இடம் கொடுக்க முடிந்தால் ஆஞ்சநேயர் கோவிலுக்கும் இடம் தர வலியுறுத்துவோம்.” என தெரிவித்தார்.

… உங்கள் பீமா