19-11-21/13.52pm
புதிய தமிழகம் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இந்து மதத்தால் மட்டுமே தேச ஒற்றுமையை உருவாக்க முடியும் என டாக்டர் கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார்.
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி மக்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார். மறைந்த முதல்வர் கலைஞர் ஆட்சியில் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் மீது கொலைமுயற்சி நடந்ததும் குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நியாமான சம்பள உயர்வு கேட்டு மக்களுடன் நின்று போராடியது தமிழகம் முழுக்க பெரும் அங்கீகாரத்தை புதிய தமிழகம் கட்சிக்கு பெற்றுத்தந்தது.டாக்டர் கிருஷ்ணசாமியின் இந்து மத நம்பிக்கைகளின் மேல் உள்ள அபரிமிதமான பற்று திமுக உள்ளிட்ட இடது சாரிகளிடம் இருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது.
தமிழகத்தில் திராவிட அரசியல் பேசும் கட்சிகள் மத்தியில் தேசியம் பேசும் கட்சிகள் புதிய தமிழகம் மற்றும் பிஜேபி மட்டுமே. டாக்டர் கிருஷ்ணசாமி மீது ஆர்.எஸ்.எஸ் சாயம் பூசப்பட்டாலும் அவர் இந்துத்துவத்தின் கருத்துக்கள் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்.
தற்போது புதிய தமிழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “புதிய தமிழகம் கட்சியின் வெள்ளிவிழாவை முன்னிட்டு, 2021, டிசம்பர் 15-ஆம் தேதி, தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் உலக இந்துக்கள் ஒற்றுமை சிறப்பு மாநாடு நடத்துவதென முடிவு செய்யப்படுகிறது.
கிருஷ்ணசாமி RSS BJP யாக மாறிவிட்டார் என்கிறார்கள். சொல்பவர்கள் இந்து மதத்தில் அஞ்ஞானத்தை தேடுகிறவர்கள். நான் அதில் விஞ்ஞானத்தை பார்க்கிறேன். இந்து மதத்தால் மட்டுமே தேச ஒற்றுமையையும் உருவாக்க முடியும். டிசம்பர் 15 தென்காசி செங்கோட்டையில் உலக இந்துக்கள் ஒற்றுமை சிறப்பு மாநாடு” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
…உங்கள் பீமா