20-2-22/17.50pm
திருவனந்தபுரம் : கவர்னர் ஆரிப் முகம்மது கான் மிரட்டல் அரசியலில் ஈடுபடுகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கணம்ராஜேந்திரன் குற்றசாட்டை எழுப்பியுள்ளார்.
ஆளுநர் குறித்து கணம்ராஜேந்திரன் கூறுகையில் ” எங்கள் கொள்கை உரையில் மாற்றங்களை கோர ஆளுநருக்கு உரிமையில்லை. அவர் ஆளுநர் இல்லை. அரசியல்வாதி. தினமும் காலையிலும் மாலையிலும் பேட்டி கொடுப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார். ஆளுநரின் கோரிக்கைகளுக்கு அரசு அடிபணிய கூடாது. அவரது கோரிக்கைகளுக்கு அடிபணிந்ததால் இரண்டு பெரிய இழப்புகள் ஏற்பட்டன.

ஒரு அரசு அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய மறுத்த ஆளுநரை முதல்வர் சந்திக்க சென்றது மாபெரும் தவறு. கவர்னர் உரையாற்ற மறுத்து அரசு சட்டசபை கூட்டத்தொடரை ஒத்திவைத்தால் நன்றாக இருந்திருக்கும். ஆளுநர் பதவியே தேவையில்லாதது. ஆளுநர் மிரட்டல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவரால் தன்னிச்சையாக எதுவும் பேசமுடியாது. அதிகார வரம்பு இல்லை என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்” என ஆளுநரை இன்று ராஜேந்திரன் விமர்சித்துள்ளார். கணம் ராஜேந்திரன் கோபத்திற்கு காலையில் டெல்லி செல்லுமுன் ஆளுநர் கொடுத்த பேட்டியே காரணம் என சொல்லப்படுகிறது.
ஆளுநர் ஆரிப் முகம்மது கான் செய்தியாளர்கள் சந்திப்பில் “ராஜ்பவனை கட்டுப்படுத்த முயலாதீர்கள். அரசுக்கு ஆலோசனை வழங்குவது ஆளுநரின் கடமை. அதற்க்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அமைச்சர்களுக்கு தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பணிபுரிந்து அரசின் ஓய்வூதிய திட்டத்தின் பலனை அவர்களுக்கு கொடுக்க முயல்வது தவறு. மேலும் சொந்த கட்சிக்காரர்களையே அமைச்சருக்கு பணியாளர்களாக நியமிப்பது ஜனநாயக விரோதம்.

இந்த சிறப்பு கோ-டெர்மினஸ் அடிப்படையில் நியமிக்கப்படும் ஊழியர்கள் ஓய்வூதிய பலன்களுக்கு தகுதியானவர்கள் இல்லை. இது அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு எதிரானது. இதை கைவிடவேண்டும். கேரள மக்களின் வரிப்பணத்தை துஷ்ப்பிரயோகம் செய்ய அனுமதிக்க முடியாது” என குறிப்பிட்டார்.
…..உங்கள் பீமா
