15-11-21/19.08pm
சென்னை : திமுக எம்பி கனிமொழியிடம் எப்போ ஜேசிபி எடுத்துட்டு வருவீங்க என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பியிருக்கின்றனர். அதிமுக ஆட்சியில் ஏரிகள் விவசாய நிலங்கள் சூறையாடப்படுகிறது என குறை சொன்ன நீங்கள், குறையை நிவர்த்தி பண்ண இப்போது வரலாமே என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் எந்த ஒரு சின்ன சம்பவத்துக்கும் அரசியல் செய்த திமுக தற்போது ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் மக்கள் நலனை கருத்தில் கொள்ளவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர். சேலம் சென்னை எட்டுவழிச்சாலை அமைக்கவிடாமல் போராட்டத்தடை கையிலெடுத்த திமுக நேரடியாக டெல்லி சென்று புறவழிச்சாலைகள் அமைக்க கோரிக்கை எழுப்பி மனு ஒன்றை கொடுத்துவிட்டு திரும்பியிருக்கிறது.
விவாசாயநிலங்களை அழிக்க அனுமதிக்கமாட்டோம் என கூறிய திமுக கோயம்புத்தூர் அன்னூர் அருகே தொழில் பூங்கா அமைக்க நிலங்களை கையகப்படுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் காவல்நிலையம் அமைக்க ஏரியை அதிமுக அரசு ஆக்கிரமித்ததாக கூறி 2019 ஜூன் 6 ல் ஒரு பதிவிட்டிருந்தார் கனிமொழி எம்பி. அதில்,
“அதிமுக ஆட்சியில் விவசாய நிலங்களுக்கு மட்டுமல்ல ஏரிகளுக்கும் கூட பாதுகாப்பு இல்லை. பாதுகாக்க வேண்டிய காவல்துறை, ஏரியின் ஒரு பகுதியை மூடி காவல் நிலையம் கட்டுகிறது. சோழிங்கநல்லூர் (சென்னை) ஏரி பாதுகாக்கபட வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.
அதை குறிப்பிட்டு அறப்போர் இயக்கத்தை சேர்ந்த ஜெயராம் என்பவர் “2019ல் உங்கள் கட்சி MP கனிமொழி அவர்கள் மண்ணை கொட்டி ஏரியை நிரப்பி கட்டப்பட்ட செம்மஞ்சேரி காவல் நிலைய ஆக்கிரமிப்பு பற்றி பேசி உள்ளார். நாங்கள் நீதிமன்றம் வரை சென்று இது ஆக்கிரமிப்பு தான் என்று IIT அறிக்கையும் கொடுத்து விட்டது. எப்போ JCB எடுத்துட்டு வருவீங்க” என அமைச்சர் மா. சுப்பிரமணியனை டேக் செய்து கேள்வியெழுப்பியுள்ளார்.
……உங்கள் பீமா