19-11-21/12.02pm
மதுரை : அறவழியில் போராடிய மாணவர்களை திமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை அடித்து விரட்டிய காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
திமுக அரசு சார்பாக கடந்த செவ்வாய்க்கிழமை மாநில உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் இனி செமஸ்டர்கள் நேரடித்தேர்வாக நடைபெறும் என குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள கல்லூரிகளின் மாணவர்கள் ஒன்று கூடி அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 150 பேரை காவல்துறை கைது செய்தது. கடந்த திங்கள் முதல் ஆன்லைன் தேர்வுநடத்தக்கோரி போராடி வரும் மாணவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும் லத்தியால் கொடூரமாக தாக்கி விரட்டப்படுவதும் தொடர்கதையாக இருக்கிறது.
மேலும் நகரின் முக்கிய பகுதிகளான தல்லாகுளம் நரிமேடு செல்லூர் மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் இரண்டடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் அனைத்து கல்லூரி வாயிலிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
…..உங்கள் பீமா