Tuesday, June 17, 2025
Home > அரசியல் > பிஜேபி எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு..! முதல்வரின் உத்தரவா..?

பிஜேபி எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு..! முதல்வரின் உத்தரவா..?

20-2-22/16.10pm

ஹைதராபாத் : பிஜேபி எம்.எல்.ஏ மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிய உத்தரவிட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. இதே காவல்நிலையத்தில் தான் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கோஷாமஹால் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் டி.ராஜா சிங். இவர் மீது இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் மங்கல்ஹாட் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. “பிஜேபிக்கு வாக்களிக்காத அனைவரின் வீடுகளையும் யோகி ஆதித்யநாத் அரசின் புல்டோசர்கள் மூலம் இடித்து தள்ளப்படும்” என வாக்காளர்களிடம் மிரட்டடியதாக டி.ஆர்.எஸ். கட்சி சார்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது.

`

அதையடுத்து டி.ராஜா சிங்கிற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதோடு அவர்மீது வழக்கு பதியுமாறு காவல்துறையை கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து டிஜிபி ஜோயல் டேவிஸ் கூறியதாவது “தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் இந்திய தண்டனைச்சட்டம் மற்றும் பிரதிநிதித்துவ சட்டம் உட்பட சில பிரிவுகளின் கீழ் மங்கல்ஹாட் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

```
```

டி.ராஜா சிங் விசிக திருமாவளவன் போல செயல்பட்டு “ராஜபக்சேவிடம் நான் கைகொடுக்கவில்லை. அவன்தான் என்னிடம் பாய்ந்து வந்தான். நானாக செல்லவில்லை.அந்த வீடியோவில் நானாக சென்று கைகொடுத்தது போல எடிட் செய்யப்பட்டு ஒட்டவைக்கப்பட்டிருக்கிறது” என கூறினால் தப்பிக்கலாம் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். மேலும் ராஜாசிங் சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ்ஸில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

…..உங்கள் பீமா