Tuesday, June 30, 2026
Home > பங்குச் சந்தை > தத்தளிக்கும் உலக பங்குச்சந்தை

தத்தளிக்கும் உலக பங்குச்சந்தை

20-2-22/18.05pm

உலகம் முழுவதும் உள்ள பங்குச்சந்தை கடந்த 2020 மார்ச் மாதம் முதல் கோவிட் காரணமாக 30 முதல் 50 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு பல மில்லியன் நஷ்டம் ஏற்பட்டது.

கடந்த 2021 முதல் தடுப்பூசிகள் கண்டுபிடிப்புக்கு பின்னர் உலக சந்தைகள் முன்னேற்றம் அடைய ஆரம்பித்தது. பல புதிய முதலீட்டாளர்கள் சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். பல புதிய கம்பெனிகளின் பங்குகள் சந்தையில் நுழைந்து நல்ல வரவேற்பு பெற்றது.

தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வந்த உலக சந்தை தற்போது அமெரிக்க பணவீக்கம் 7.5% ஆக அதிகரித்தாலும், ரஷ்யா – யூக்ரேன் போர் பதற்றம் காரணமாகவும் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. தங்கம், கச்சா எண்ணெய்யின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியா பொருத்தவரை மக்கள் மீது சுமையை இறக்காமல் தொடர்ந்து 100 நாட்களுக்கு மேல் எந்த மாற்றமும் இல்லாமல் விநியோகித்து வருகிறது. அதே சமயம் விமானத்தில் உபயோகப் படுத்தப்படும் வைட் பெட்ரோலின் விலை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

இந்திய பங்குச் சந்தையில் அந்நிய நாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று வருகின்றனர். அதே சமயம் உள் நாட்டு முதலீட்டாளர்கள் முதலீட்டை அதிகரித்து வருகின்றன. இனி வரும் காலங்களில் போர் பதற்றம் குறையும் பட்சத்தில் சந்தையில் முன்னேற்றம் அடைய வாய்ப்புள்ளது. ஒரு வேளை போர் நடந்தால் தொடர்ந்து சரிவை சந்திக்கும். இதனால் உலக நாடுகளின் வளர்ச்சியில் தேய்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

முதலீட்டாளர்கள் மிகுந்த விழிப்புடன் சந்தையில் முதலீடு செய்வது நன்மை பயக்கும். குறிப்பாக ஏப்ரல் மாதம் வரை ஏற்ற இறக்கங்கள் அதிக அளவில் இருக்கும். ஜூன் முதல் சந்தை மீண்டும் ஒரு நிலையான பாதையில் இயங்க தொடங்கும்.

செளந்தரராஜன் சேதுராமன், நங்கநல்லூர்.

ShareMarket #IndianMarket #RussiaUkraineWar #WorldMarket #OilPrice