பாரத பிரதமர் மோடி அவர்கள் நாடு மக்களின் நலனை கருத்தில் கொண்டு தடுப்பூசியை இலவசமாக அறிவித்தார். பிரதமர் மோடி தடுப்பூசி திட்டம் எனும் பெயரில் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. உலகில் எந்த நாடுகளும் எட்டியிராத சாதனையை மத்திய பிஜேபி அரசு செய்து காட்டியுள்ளது.
இந்தியாவில் இதுவரை 90 கோடிக்கும் மேலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. மேலும் ஜல்ஜீவன் மிஷன் எனும் திட்டத்தின் மூலம் இந்தியாவின் ஒவ்வொரு வீடுகளுக்கும் தண்ணீர்குழாய் அமைத்து கொடுக்கிறது மத்திய பிஜேபி அரசு.
ஆனால் தென்காசி பகுதியில் திமுகவினர் இணைப்பு கொடுக்க மக்களிடம் 4000 முதல் 6000 வரை லஞ்சம் பெறுவதாக பிஜேபி தலைவர் கல்யாண் என்பவர் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரதமரின் தடுப்பூசி திட்டத்தில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்ட திமுக தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை போட்டிருக்கிறது.
இதுகுறித்து ஏற்கனவே மதுரை பகுதியில் கலெக்டரிடம் மனு கொடுத்திருப்பதாக சொல்லப்பட்டது. தென்காசி பகுதியில் பாரத பிரதமர் படத்திற்கு பதிலாக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்ட திமுகவை எதிர்த்து தென்காசியில் இன்று பிஜேபியினர் சார்பில் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடத்தில் போராட்டம் நடைபெற்றது.
காவல்துறையினர் வந்து சமாதானம் செய்தனர். பின்னர் மோடி படத்தை வைத்தபின்னரே பிஜேபியினர் களைந்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய தென்காசி பிஜேபியினர் ” இனி மத்திய அரசின் நலத்திட்டங்களை திமுக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டால் அங்கே போராட்டம் நடைபெறும். தமிழகம் முழுதும் இந்த நடவடிக்கை தொடரும்.” என குறிப்பிட்டனர்.
…..உங்கள் பீமா
#narendramodi #dmk #sticker #vaccine