Monday, February 10, 2025
Home > அரசியல் > மிரட்டினாரா அமைச்சர்..? பதிவை நீக்கிய புதிய தலைமுறை..!

மிரட்டினாரா அமைச்சர்..? பதிவை நீக்கிய புதிய தலைமுறை..!

01-02-2022/11.15am

கரூர் : தமிழகத்தில் வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பாளர் பட்டியல் மற்றும் தொகுதிப்பங்கீடு விவகாரங்கள் ஆலோசனை கூட்டம் நேற்று கரூரில் நடைபெற்றது. அதில் கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பியான ஜோதிமணியும் கலந்துகொண்டார்.

அந்த கூட்டத்தில் திமுக கூட்டணிக்கட்சியை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி கூட்டத்தை புறக்கணித்ததோடு திமுகவினர் மீது கற்றச்சாட்டை எழுப்பினார் ஜோதிமணி. இதில் கொந்தளித்த திமுகவினர் ஜோதிமணியை விரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து செய்திகளில் பரபரப்பாக ஜோதிமணி விவகாரம் பேசப்பட்டு வந்தநிலையில் புதிய தலைமுறை செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

அந்த செய்தியில் “ஜோதிமணிக்கு கரூர் காங்கிரஸ் கண்டனம்.எம்பி ஜோதிமணி தன்னிச்சையாக செயல்பட்டு தோல்வியை தேடித்தர முயற்சி. அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி காழ்ப்புணர்ச்சியில் ஜோதிமணி பேசுவதாக காங்கிரஸ் கண்டனம்” என குறிப்பிட்டிருந்தது. ஆனால் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்னசாமி இதை மறுத்துள்ளார்.

`

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” புதிய தலைமுறை செய்தியை நாங்கள் மறுக்கிறோம். எங்கள் கரூர் எம்பி ஜோதிமணி எளிமையான பின்னணியில் இருந்து வந்து அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுகிறார். அவர்மீது இதுபோன்ற அவதூறுகளை பரப்புவது ஏற்புடையதல்ல” என குறிப்பிட்டிருக்கிறார். அதையடுத்து புதியதலைமுறை அந்த செய்தியை நீக்கியுள்ளது.

```
```

இந்த விஷயத்தில் நேரடியாக திமுக எந்த ஒரு கருத்தையும் கூறாமல் இருப்பது பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது. தேசிய கட்சியான காங்கிரஸ் ஒரு சீட்டுக்கு இந்த அளவிற்கு தரம்தாழ்ந்து போகவேண்டிய அவசியம் என்ன என தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். மேலும் ஜோதிமணி விவகாரத்தை ஊடகங்களில் பரபரப்பு செய்தியாக்க வேண்டாம் என அமைச்சர் ஒருவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

…..உங்கள் பீமா