திமுக ஆட்சிக்கு வந்து சில நாட்களிலேயே கஜானாவில் நிதி இல்லை தமிழகத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் இரண்டு லட்சத்திற்கும் மேல் கடனே இருக்கிறது என வெள்ளையறிக்கை விட்டது. ஆனால் அதற்க்கு முரணாக ஒரு திமுக அமைச்சர் 2500 கோடி செலவில் பூங்காக்கள் கட்டப்படும் என தெரிவித்தார்.
நிதிப்பற்றாக்குறையை மேற்கோள் காட்டி நிதியமைச்சர், அரசு ஊழியர்களுக்கு வாக்குறுதியாக கொடுத்த சில சலுகைகளை தர முடியவில்லை என அறிவித்தார். மேலும் முதல்வர் முக ஸ்டாலின் 100 கோடி செலவில் ராமசாமி அவர்களுக்கு சிலை வைக்கப்படும் என அறிவித்தார்.
இதோடு கலைஞர் அவர்களுக்கு மெரினாவில் நினைவிடம் 250 கோடி செலவில் கட்டப்படும் என தெரிவித்தார். இன்னும் பல சிலைகள் நிறுவப்பட இருக்கின்றன. நிதிப்பற்றாக்குறையால் பல கோடி மதிப்பிலான பத்திரங்கள் திமுக அரசால் 6000 கோடிக்கு அடகுவைக்கப்பட்டு நிதி பெறப்பட்டது. மேலும் கோவில் நகைகளை உருக்கி அதை தங்க கட்டிகளாக மாற்றி அடகு வைக்கப்போவதாக அறநிலையத்துறை அமைச்சர் சில நாட்களுக்கு முன் தெரிவித்தார். இப்படி நிதிநிலைமை மோசமாக இருக்க சில அத்தியாவசியமற்ற சலுகைகளை திமுக வழங்குவதாக எதிர்க்கட்சியினர் விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க,உலமாக்கள் ஓய்வூதியம் திட்டத்தின் கீழ் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் 21 நபர்களுக்கும் இன்று 9 நபர்களுக்கும், ஆக மொத்தம் 30 நபர்களுக்கு இந்த குறுகிய காலத்திலே ஒப்புதல் அளித்துள்ளோம். தகுதி வாய்ந்த மீதம் உள்ள நபர்களுக்கும் கூடிய விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.
..உங்கள் பீமா