28-2-22/10.44am
மணிப்பூர் : மணிப்பூர் தேர்தல் இன்று தொடங்கியுள்ள நிலையில் அனைத்து கட்சிகளின் கவனமும் மணிப்பூர் பக்கம் திரும்பியிருக்கிறது. வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு கடைசி நேரத்தில் விரட்டப்பட்ட வேட்பாளர் என தமிழக அரசியலுக்கு சற்றும் குறைவில்லாமல் பரபரப்பை கிளப்பியிருக்கிறது மணிப்பூர் அரசியல்.

காலை 9 மணிவரை 10 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் காங்போகி பகுதியில் 13 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் மணிப்பூரில் உள்ள 60 தொகுதிகளில் 38 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இரண்டாவது மற்றும் கடைசி கட்ட தேர்தல் மார்ச் 5 அன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில் இன்று தேர்தல் தொடங்கும் சில மணிநேரத்திற்கு முன்பாக வாங்காய் தொகுதி வேட்பாளரான ஸலாம் ஜாய் சிங் என்பவரை நடத்தைவிதிகளை மீறியதாக கூறி காங்கிரஸ் நீக்கியுள்ளது. மேலும் அவர் பிஜேபிக்கு ஆதரவாக செயல்பட்டார் என தலைமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜனதா தள் வேட்பாளரான வாஹீங்பம் ரோஜித் சிங் என்பவர் அக்ஸ்ட்ரிகாவ் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவர் தேர்தல் பணிகளை முடித்துவிட்டு தனது ஆதரவாளர்களுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அவரை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்துவந்த சில மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த வேட்பாளர் அங்கேயே மயங்கிசரிந்தார். அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதையடுத்து கிழக்கு இம்பால் பகுதியில் போலீசார் தீவிரவேட்டை நடத்திவருகின்றனர். இதை தொடர்ந்து மற்றொரு இடத்தில் வெடிகுண்டு வீசப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
…..உங்கள் பீமா