3-3-22/14.48pm
தேனி : அதிமுகவின் தலைமையேற்க சசிகலாவுக்கு ஆதரவாக தேனி மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியதை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்ற பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதிமுகவின் அடுத்தடுத்த தோல்விகள் மற்றும் தொடர்கைதுகள் அதிமுகவை பலவீனப்படுத்தியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மேலும் சரியான தலைமை வேண்டும் என அதிமுக தொண்டர்கள் முணுமுணுக்கத்தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்க தேனி சென்றுள்ளார். இந்த சந்திப்பே பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்ஸின் பண்ணைவீட்டில் நடைபெறுகிறது. இதுகுறித்து பேசிய ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா ” சசிகலா மற்றும் தினகரன் இணைப்பை தொண்டர்கள் விருப்புகிறார்கள். அவர்கள் தலைமையேற்பதில் பன்னீர்செல்வத்துக்கு எந்த தயக்கமும் இல்லை” என கூறியுள்ளார். மேலும் நாளை சசிகலாவுடன் ராஜா சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினகரன் கூறுகையில் ” அதிமுக சுயபரிசோதனை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் தொண்டர்கள் குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. அதிமுகவில் உள்ள அனைவரும் எங்கள் நண்பர்கள்தான்” என தெரிவித்துள்ளார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி ” அதிமுகவை சசிகலா வழிநடத்த வேண்டும். ஒரே தலைமையின் கீழ் கட்சி வழிநடத்தப்படவில்லையெனில் அதிமுக காணாமல்போகும்” என செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
உதயகுமாருடனான சந்திப்பிற்கு பிறகு எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் தனியாக சந்தித்து பேசுவார்கள் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக வாக்குவங்கி தினகரனால் உடைக்கப்பட்டது என்பது கண்கூடு. இந்நிலையில் சசிகலா தினகரன் இருவரின் வருகை கட்சியை பலப்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
…..உங்கள் பீமா
