Friday, March 29, 2024
Home > அரசியல் > முஸ்லீம் லீக் உறுப்பினரை கொன்ற கம்யூனிஸ்டுகளுக்கு ஜாமீன்..!!

முஸ்லீம் லீக் உறுப்பினரை கொன்ற கம்யூனிஸ்டுகளுக்கு ஜாமீன்..!!

2021 ஏப்ரல் 6 கேரளாவில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது அப்பாவி முஸ்லீம் லீக் தொண்டர் ஒருவர் கம்யூனிஸ்ட் குண்டர்களால் குண்டுவீசி கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 10 CPM குண்டர்களுக்கும் இன்று கேரளா உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

தேர்தல் நடந்த ஏப்ரல் 6 அன்று குத்துப்பரம்பா புல்லுக்கரா கிராமத்தில் தனது வீட்டில் இருந்த மன்சூர் என்பவரை CPM கட்சி உறுப்பினர்கள் வீடு புகுந்து தாக்கினர். தடுக்க வந்த அவரது சகோதரர் முஹாஸின் என்பவரையும் கடுமையாக தாக்கினர். ஒரு கட்டத்தில் கம்யூனிஸ்டுகள் தாங்கள் ஒழித்து வைத்திருந்த கையெறிகுண்டுகளை மன்சூர் மீது வீசினர்.

பின்னர் அங்கிருந்து தப்பியோடினர். இதில் மன்சூரின் அண்ணனும் கடுமையாக பாதிக்கப்பட்டார். அவர்கள் இருவரும் தலசேரி அரசுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு உபகரணங்கள் இல்லாததால் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மன்சூர் உயிரிழந்தார்.

`

அதையடுத்து காவல்துறை மன்சூர் பக்கத்து வீட்டில் வசிப்பவரான ஷினோஜ் என்பவனை கைது செய்தது. கூட்டாளிகளான 10 பேரையும் அடுத்தடுத்த வாரங்களில் கைது செய்தது காவல்துறை. தேர்தல் நாளன்று தடையை மீறி வாக்கு சேகரித்ததால் இரு கும்பலுக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் கடுப்பான கம்யூனிஸ்ட் கும்பல் மன்சூரை கொன்றது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

```
```

இந்த வழக்கில் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. மீண்டும் சில நாட்களில் ஜாமீனை எதிர்த்து நீதிமன்றம் சென்ற பாதிக்கப்பட்ட குடும்பம் ஜமீனை ரத்து செய்ய வைத்தது. CPM கும்பல் உயர்நீதிமன்றத்தை நாடியது. அந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதி நீதிமன்றம் அனைவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

…..உங்கள் பீமா