Friday, March 29, 2024
Home > செய்திகள் > தெலுங்கு புத்தாண்டில் சோகம்..! அடிப்படைவாதிகள் கல்வீச்சு

தெலுங்கு புத்தாண்டில் சோகம்..! அடிப்படைவாதிகள் கல்வீச்சு

3-4-22/10.10AM

ராஜஸ்தான் : யுகாதி என அழைக்கப்படும் ஹிந்துக்களின் நவ் சம்வத்சரை குறிக்கும் புத்தாண்டை கொண்டாட மக்கள் பேரணியாக இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதியில் சென்றனர். அப்போது அங்கிருந்த பல அடிப்படைவாதிகள் கல்வீசி தாக்கினர்.

ராஜஸ்தான் மாநிலம் கவரிலியில் ஹிந்துக்கள் பேரணியாக சென்றனர். அவர்கள் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதி வழியே செல்லும்போது அவர்கள் மீது கற்கள் வீசப்பட்டது. இதைத்தொடர்ந்து வன்முறை வெடித்தது. கடைகள் பைக்குகள் எரிக்கப்பட்டன. மேலும் பலர் காயமடைந்தனர். இந்த வன்முறையில் 35 பேர் காயமடைந்ததாகவும் ஒருவர் ஆபத்தான நிலையில் ஜெய்ப்பூரில் இருக்கும் எஸ்.எம்.எஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்தது.

இதனால் கலவரம் பரவாமல் இருக்க ஜெய்ப்பூரில் இருந்து 170 கிலோமீட்டர் தூரம் வரை இணையசேவை நிறுத்தப்பட்டுள்ளது.

`

மேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா பொதுமக்களிடம் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். சூப்பரின்டென்ட் மற்றும் இன்ஸ்பெக்டர் பதவியிலுள்ள 50 அதிகாரிகள் மற்றும் 600 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சூழ்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

```
```

இதுகுறித்து பேசிய மாநில பிஜேபி தலைவர் சதீஸ் பூனியா ” காங்கிரசின் சமாதான கொள்கையே இதற்க்கு காரணம். இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை.

ஹிந்துக்களின் புத்தாண்டு அன்று ஏற்பாடு செய்யப்பட பைக் பேரணியின் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் இது” என குறிப்பிட்டுள்ளார்.

…….உங்கள் பீமா