Friday, March 29, 2024
Home > செய்திகள் > மத்திய அமைச்சரவை கூட்டம்..! ராணுவத்திலிருந்து சீக்கியர்கள் நீக்கம்..? FACT CHECK

மத்திய அமைச்சரவை கூட்டம்..! ராணுவத்திலிருந்து சீக்கியர்கள் நீக்கம்..? FACT CHECK

8-1-22/17.10pm

டெல்லி : பாரத பிரதமர் மோடி கடந்த இரு தினங்களுக்கு முன் பஞ்சாப் சென்றார். அப்போது அவரது வாகனம் போராட்டக்குழுவினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி செல்வதாக இருந்த பெரோஸ்புர் சட்லஜ் நதி ஆற்றில் பாகிஸ்தானை சேர்ந்த படகு ஒன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதில் அனைத்தும் சுத்தமாக காலி செய்யப்பட்டு எந்த ஒரு ஆவணங்களோ உடமைகளோ இல்லாமல் நின்றிருக்கிறது. அது பிரதமர் மோடி பயணப்பட இருந்த ஊருக்கு சரியாக 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து அனைத்து புலனாய்வு அமைப்புகளுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பிரபல ஆங்கில சேனல் ஒன்று ஒளிபரப்பியுள்ளது. அந்த வீடியோவில் போலீஸ் அதிகாரிகள் தங்களது வேனில் போராட்டக்காரர்களை அழைத்துவந்து பிரதமர் வரும் பாதையில் நிறுத்தியதாக வாக்குமூலம் அளிக்கிறார். இதனிடையே சம்பவ இடத்தை சேர்ந்த 8 காவல்துறை அதிகாரிகள் மற்றும் டிஜிபி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பஞ்சாப் புது டிஜிபியாக விரேஷ் குமார் பாவ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

`

இந்நிலையில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் வெளியுறவுத்துறை ஜெய்சங்கர் தலைமையில் அவசர கூட்டம் நடத்தப்பட்டதாகவும் அதில் இந்திய ராணுவத்தில் உள்ள சீக்கியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்யும்படியும் ஆலோசித்து முடிவெடுத்ததாக ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகியது. இது தொடர்பாக மத்திய அரசு ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.

```
```

அப்படி ஒருகூட்டம் நடைபெறவில்லை என்றும் சீக்கியர்களை நீக்க வேண்டும் என்று கூறிய வீடியோ போலி என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல ஒரு அசாதாரண சூழலில் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

…..உங்கள் பீமா