Tuesday, June 17, 2025
Home > செய்திகள் > சீனாவில் நடக்கும் வின்டர் ஒலிம்பிக்ஸ்..! இந்தியா புறக்கணிப்பு..!

சீனாவில் நடக்கும் வின்டர் ஒலிம்பிக்ஸ்..! இந்தியா புறக்கணிப்பு..!

4-2-22/10.35am

டெல்லி : இந்திய வெளியுறவுத்துறை அறிக்கையை அடுத்து பிரச்சார் பார்தியின் சி.இ.ஓவான சசி சேகர் வேம்பட்டி தூர்தர்ஷன் வின்டர் ஒலிம்பிக்ஸை ஒளிபரப்ப போவதில்லை என அறிவித்துள்ளார்.

சீன இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பது மட்டுமல்லாமல் எல்லையோர மக்களை தாக்கி காயப்படுத்தி வருவதாகவும் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 13 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்த ஒரு முன்னேற்றமும் காணப்படவில்லை என தெரிகிறது. அருணாச்சல பிரதேச எல்லை பகுதியில் உள்ள கிராமத்திலிருந்து மிரோம் தாமன் எனும் 17 வயது இளைஞரை சீன வீரர்கள் கடத்தி சென்றனர்.

பின்னர் ஜனவரி 18 அன்று அந்த இளைஞர் திருப்பி அனுப்பப்பட்டார். இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை தரப்பில் ” கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த சீன இந்திய தாக்குதல்களில் கலோனியல் உட்பட 20 வீரர்களை பறிகொடுத்துள்ளோம். இதுகுறித்த பேச்சுவார்த்தைக்கு சீன ராணுவம் ஒத்துழைக்க மறுக்கிறது. இதனால் சசீனாவில் நடக்கும் வின்டர் ஒலிம்பிக்சில் இந்திய அதிகாரிகள் யாரும் கலந்துகொள்ளப்பபோவதில்லை.

`

வீரர்கள் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டாலும் துவக்க நிகழ்ச்சி மற்றும் நிறைவு நிகழ்ச்சிகளில் இந்தியத்தரப்பில் எந்த ஒரு உயரதிகாரியும் கலந்துகொள்ளமாட்டார்கள்” தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கலந்துகொள்ளும் நிலையில் அமெரிக்கா நிகழ்ச்சி நிரல்களில் கலந்துகொள்ளப்பபோவதில்லை என அறிவித்துள்ளது.

```
```

இந்தியாவில் ஏற்கனவே கொரோனா ஓமிக்ரான் என வைரஸ்கள் மக்களை வதைத்துக் கொண்டிருக்கையில் தற்போது சீனாவில் பரவிவரும் நியோ கோவ் போன்ற கொடிய வைரஸ்களை இந்தியாவிற்குள் கொண்டுவருவதை தடுக்க இந்த வின்டர் ஒலிம்பிக்சிற்கு இந்திய வீரர்கள் செல்வதை தடைசெய்யவேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

…..உங்கள் பீமா